பயணியர் வருகை இல்லை 6 சிறப்பு ரயில்கள் ரத்து
சென்னை: போதிய அளவில் பயணியர் வருகை இல்லாததால், ஆறு சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே அறிக்கை: l கர்நாடகா மாநிலம் மைசூரு - திருநெல்வேலி இடையே, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், திருநெல்வேலி - மைசூரு இடையே செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், வரும் 27ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன l மைசூரு - காரைக்குடி இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், காரைக்குடி - மைசூரு இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், வரும், 30ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன l மைசூரு - ராமநாதபுரம் இடையே, திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், ராமநாதபுரம் - மைசூர் இடையே செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், வரும் 27ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கு போதிய அளவில் பயணியர் வருகை இல்லாததால் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.