வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உணவுக்கு கிடங்கு அமைக்காமல் மக்களை சாகடிக்கும் விஷமான சாராயத்திற்கு கிடங்கு அமைக்கும் திருட்டு திராவிட மாடலுக்கு மறுபடியும் இலவசமும் ஓசியும் வாங்கிக் கொண்டு வாக்களியுங்கள் விவசாயிகளின் வாழ்வு ஒயரும்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 60,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 240 டன் நெல் வீணாகும் சூழல் உருவாகி உள்ளது.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.ஒவ்வொரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். இதன் வாயிலாக, கணிசமான நெல் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர்.
அனுமதி
இதில், நவரை பருவத்திற்கு மட்டும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மாவட்டம் முழுதும் துவக்க அனுமதி அளிக்கின்றனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர்.கடந்த நவரை பருவத்திற்கு, நுகர்பொருள் வாணிப கழத்தினர், 95 நெல் கொள்முதல் நிலையங்கள்; தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர், 33 நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம், 128 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.கடந்த வாரம் வரையில், நுகர்பொருள் வாணிப கழகத்தினர், 20 லட்சம் நெல் மூட்டைகள். தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் 9.50 லட்சம் நெல் மூட்டைகள் என, 29.50 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்துள்ளனர்.240 டன் வீண்
இதில், உத்திரமேரூர் ஒன்றியத்தில், அரும்புலியூர், பழவேரி, திருமுக்கூடல், பேரணக்காவூர், களியப்பேட்டை, கரும்பாக்கம், மணல்மேடு, வேடபாளையம், எடமிச்சி, சாலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள். வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி, கொட்டவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 60,000 நெல் மூட்டைகளுக்கு மேலாக மழையில் நினைந்துள்ளன.பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் அடுக்கி தார்பாய் போட்டிருந்தாலும், நெல் மூட்டைகளின் ஈரப்பதத்தால் நெல் முளைப்பு ஏற்பட்டு உள்ளது.இதனால், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 240 டன் நெல் வீணாகும் சூழல் உருவாகி உள்ளது.எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் பிடித்து வைத்திருக்கும் நெல் மூட்டைகளை விரைவாக லாரிகளில் ஏற்றி சென்று சேமிப்பு கிடங்கில் பத்திரப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் முடிக்கப்பட்டுள்ளன.கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை நெல் சேமிப்பு கிடங்கில் இடவசதி இல்லாததால், நெல் அரவை நிலையத்திற்கு அனுப்பி வருகிறோம். மேலும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை நேரடியாக நெல் அரவை நிலையங்களுக்கு அனுப்பி விடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உணவுக்கு கிடங்கு அமைக்காமல் மக்களை சாகடிக்கும் விஷமான சாராயத்திற்கு கிடங்கு அமைக்கும் திருட்டு திராவிட மாடலுக்கு மறுபடியும் இலவசமும் ஓசியும் வாங்கிக் கொண்டு வாக்களியுங்கள் விவசாயிகளின் வாழ்வு ஒயரும்