உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது

துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது

கோவை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றை கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு: கோவை விமான நிலையத்தில் எப்போதும் போல், சுங்கத்துறை அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகள் சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, அவர்களிடம் சோதனை நடத்தினர். பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர்கள் துபாயில் இருந்து 1461 சிகரெட்டு பாக்கெட்டுகள், 213 எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், 12 உயர்ரக செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர். இதன் மதிப்பு ரூ.36.81 லட்சம் ஆகும். அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், 7 பேரையும் கைது செய்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு; 1. தருண் சேகரன், திருவாரூர்2. சையது அமானுல்லா சுல்தான், ராமநாதபுரம் 3. பிரத்தியுனன் கெங்கமுத்து, ராமநாதபுரம்4. அஜ்மீர் காஜா மைதீன், திருநெல்வேலி 5. மன்சூர்கான் பாபு, சென்னை 6. யாசர் அராபத் அப்துல் ஜப்பார், சிவகங்கை 7. பைசல் அகமது முகமது யூசுப், சிவகங்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 23, 2025 13:09

இவைகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு துபாய் விமான நிலையத்தில் ஏன் சோதிக்கவில்லை? ஒருவேளை துபாய் விமான நிலைய அதிகாரிகளும் இந்த கடத்தலில் ஈடுப்பட்டிருக்கிறார்களா..?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 14:28

துபாயில் செக் செய்யமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் முறைப்படி லக்கேஜாக எடுத்து செல்வதாகவே அர்த்தம். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடமிருந்துதான் நம்மூர் கஸ்டம்ஸ் க்கு தகவல் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை