உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு குலுக்கலில் 75 பேர் தேர்வு: பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

சிறப்பு குலுக்கலில் 75 பேர் தேர்வு: பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் நீண்ட துாரம் பயணம் செய்ய, டிக்கெட் முன் பதிவு வசதி உள்ளது. தினமும் 19,000 பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதை அதிகரிக்கும் வகையில், மாதந்தோறும் 13 பேர் குலுக்கலில் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். அவர்களில், முதல் மூன்று பேருக்கு தலா 10,000 ரூபாய், 10 பேருக்கு தலா 2,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஏப்., 1 முதல் ஜூன் 15 வரை, முன்பதிவு செய்து பயணித்தோரில், 75 பேர் சிறப்பு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், 25 பேர் ஓராண்டில் 20 முறை; 25 பேர் 10 முறை; 25 பேர் 5 முறை, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. வெற்றியாளர்களை, அமைச்சர் சிவசங்கர், குலுக்கல் முறையில் நேற்று முன்தினம் தேர்வு செய்தார். அவர்கள் செப்., 1 முதல் அடுத்த ஆண்டு ஆக., 31ம் தேதி வரை, பயணச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 15, 2025 17:48

இந்த இலவசமாக பயணம் குலுக்கல் முறையில் ஆண்களுக்கு மட்டும் சலுகையாக அளிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை