உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபரிமலைக்கு வந்த பக்தர்கள் 9 பேர் மாயம்

சபரிமலைக்கு வந்த பக்தர்கள் 9 பேர் மாயம்

கம்பம் : சபரிமலையில் நடந்த மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த 2 மாத உற்ஸவ காலங்களில் கோயிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களில் தமிழகத்தை திருவள்ளூரை சேர்ந்த ராஜா 39, திருவண்ணாமலை எழுமலை 57, சென்னை கருணாநிதி 58, பொம்மையபாளையம் அய்யப்பன் 24, ஆந்திரா விசாகபட்டினத்தை சேர்ந்த கொரி பில்லி பாப்ஜி 75, ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த குண்டா ஈஸ்வருடா, தெலுங்கானாவை சேர்ந்த வினய் 27, கர்நாடகா தார்வாரை சேர்ந்த தாப்ப உனக்கல் 65, கோழிக்கோட்டை சேர்ந்த முத்துராம் 74 , ஆகிய 9 பேரை காணவில்லை.இவர்கள் நிலக்கல், பம்பை, சன்னிதானம் இடங்களில் இருந்து மாயமாகி உள்ளனர். பத்தனம்திட்டா எஸ்.பி. அஜித் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர், தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை