உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: கோவா திரைப்பட விழாவில் கவுரவம்

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: கோவா திரைப்பட விழாவில் கவுரவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த விழா இன்று( நவ.,28) நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.இன்று, முன்னணி திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 50 ஆண்டுகள் சினிமாவில் நடத்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.விருதை பெற்றுக் கொண்ட ரஜினி பேசியதாவது: எனக்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி. 50 ஆண்டு சினிமா பயணம் வேகமாக ஓடிவிட்டது. சினிமாவையும், நடிப்பையும் என்றும் விரும்புகிறேன். இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்கவே விரும்புகிறேன். என்னை வாழ வைத்த தமிழக மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி. இவ்வாறு ரஜினி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gnana Subramani
நவ 28, 2025 22:16

அரசியலுக்கு வருவதாக சொல்லி இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் ரசிகர்களை ஏமாற்றியது வாழ்நாள் சாதனை தான்


Oviya Vijay
நவ 28, 2025 20:42

மத்திய அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது... அனைத்து இந்திய மொழி நடிகர்களாலும், ஒருவரின் அசாத்திய திறமைக்காகப் போற்றப்படும் ஒரு நடிகர் என்றால் அது நம் தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த கமல்ஹாசன் தான். அதில் எவருக்கும் இங்கே மாற்றுக் கருத்து என்பது இருக்க வாய்ப்பில்லை... ஆனால் அவருக்கு வழங்கப்படும் விருதுகள் யாவும் காலம் தாழ்த்தியே வழங்கப் படுகின்றன... காரணம் எந்நாளும் அவர் தற்போதிருக்கும் மத்திய அரசுடன் இணக்கம் காட்டியதில்லை... ஒருவேளை மத்திய அரசுக்கு அவரும் ஜால்ரா தட்டுபவராக இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு அனைத்து விருதுகளும் அவர் வீட்டின் முன்னே வரிசையில் நின்றிருக்குமோ என்னவோ... சமீபத்தில் தாதா சாகேப் விருதுக்காக அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லாலின் திறமையை இங்கே குறைத்து மதிப்பிடுவது என்னுடைய நோக்கமல்ல... ஆனால் இத்தகைய உயரிய விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது அதனை வாங்கும் நடிகர்களுக்கே அது தர்மசங்கடத்தை உண்டு செய்யும்... அவருக்குத் தெரியாதா என்ன... இந்த விருது இன்னமும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படவில்லை என்பது... கமலை விட அவர் திறமை படைத்தவர் என்றால் அவரே ஒப்புக் கொள்ள மாட்டார்... மோகன்லாலின் கலைப்பயணம் ஆரம்பித்தது 1978 ல்... ஆனால் கமல்ஹாசனின் கலைப்பயணம் 1960 ல் தன் ஐந்து வயதிலேயே ஆரம்பித்தாயிற்று... விருதுகள் என்பது மற்ற கலைஞர்களை வேண்டுமானால் பெருமைப் படுத்தலாம். ஆனால் கமலுக்குக் கொடுக்கப்படும் எத்தகைய விருதும் தனக்குத் தானே பெருமை கொள்ளுமேயொழிய உண்மையில் அதில் கமலுக்குப் பெருமையல்ல... பத்மபூஷன் விருது ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட பின்னரே கமலுக்குக் கொடுக்கப்பட்டது... அதே போல் பத்மவிபூஷன் விருதும் அவ்வாறே ரஜினிக்குத் தான் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கமலுக்குக் கொடுக்கப்படவில்லை... இங்கே திறமைக்கு மரியாதை இல்லாமல் அரசியல் செல்வாக்கினால் விருதுகள் வழங்கப்படும் போக்கு நீடிக்குமானால் அது கலைஞர்களுக்கு ஆளும் அரசுகள் செய்யும் துரோகம் என்றே கூறவேண்டும்... நம் தமிழகத்தின் பொக்கிஷம் நாகேஷ் என்னும் மாபெரும் நடிகர் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது கூட பெறவில்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது... அதே போல் பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே என்னும் விருது நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட பின்பே மத்திய அரசால் இந்திய நாட்டின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது... பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றது நம் நடிகர் திலகம் தான்... அவ்வாறு இன்னொரு நாடு நம் நாட்டின் கலைஞனின் திறமையை அங்கீகரிக்கும் போது நம்மை ஆளும் அரசுகளின் கண்களுக்கு அது புலப்படாமல் போவது வெட்கக்கேடு... இந்த சூழ்நிலையில் பாராட்டத்தக்க ஒருவர் என்றால் அது பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அவர்கள். அவருக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை வாங்க மறுத்து அதற்கான காரணமாக, இது காலம்தாழ்த்தி வழங்கப்படும் மிகச்சிறிய விருது என்றும் அதனைப் பெற தனக்கு விருப்பமில்லை என்றும் தன் சேவைக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னாவே உரியது என்றும் மத்தியில் ஆளும் அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருந்தார்... பாகுபாடு பார்த்து வழங்கப்படும் விருதுகள் ஆளும் அரசுகளுக்குத் தான் அவமானமேயன்றி விருதுகள் பெறாத திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு அல்ல... விருதுகள் கொடுப்பதில் யார் புறக்கணித்தாலும் உலகளவில் பெருமை சேர்க்கும் கமல்ஹாசன் என்னும் ஒரு மாபெரும் கலைஞன், ஒரு தமிழன் என்பதில் எந்நாளும் நமக்குள் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது...


ஆரூர் ரங்
நவ 28, 2025 21:29

விலை போகும் ஆட்களுக்கு விருதளித்தால் முன்பு அதனைப் பெற்ற கலைஞர்களுக்கு அவமானம். ( உங்க அகராதிப்படி அவர் ஆரியராயிற்றே).


நிவேதா
நவ 28, 2025 21:35

உங்கள் பதில் மிகவும் விந்தையாக உள்ளது. அனைத்து உயரிய விருதுகளும் ரஜினிக்கு கிடைக்க காரணம், தமிழ் சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற காரணத்துக்காக தான். இன்னும் அவர் தேசிய அளவில் சிறந்த நடிகர் விருது வாங்கவில்லை என்பது உங்களுக்கு தெரியாதோ என்னவோ


Palanisamy Sekar
நவ 28, 2025 20:27

வாழ்நாள் சாதனையாளர் என்பதை திரைப்பட சாதனையாளர் என்று திருத்தி சொல்லுங்களேன். சினிமாவில் சுலபமாக சாம்பாதிக்கலாம். ஊதியமும் பல கோடிகளில் புரளும், ஊதியமும் பெற்றுக்கொண்டு ஊதியம் கொடுத்த தயாரிப்பாளரின் பணத்தில் ஓசியில் உடைகள் உடுத்துவதும் ஊர் சுற்றுவதும் உலகம் சுற்றுவதிலும் கூச்சப்படாமல் அனுபவிக்கும் அந்த ஓசி சுகத்துக்காக அடுத்த பிறவியிலும் நடிகராக பிறக்க பேராசைப்படுவது நியாயமா?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை