மேலும் செய்திகள்
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்
4 minutes ago
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
17 minutes ago
பள்ளிகளுக்கு 22 அடி சாலை கட்டாயம்
20 minutes ago
தேர்தலில் தவறு நடப்பது உண்மை; பிரேமலதா
23 minutes ago
சென்னை : வேலுார் அல்லேரியில், 1,800 மெகா வாட் திறனில், நீரேற்று மின் நிலையம் அமைக்க, அதானி நிறுவனத்துக்கு, தமிழக பசுமை எரிசக்தி கழகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது. தமிழகத்தில் பசுமை மின் திட்டங்களை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தும் பணியில், மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தனியார் இடத்தில், நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த விருப்பம் உள்ள நிறுவனங்களுக்கு, இந்தாண்டு துவக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. நீரேற்று மின் நிலையத்தில் மேல் அணை, கீழ் அணை இருக்கும். மேல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, நீரேற்று மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும். பின், அந்த தண்ணீர் அதிக திறன் உடைய, 'மோட்டார் பம்ப்' வாயிலாக, மேல் அணைக்கு எடுத்து செல்லப்படும். அந்த தண்ணீரை பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் மின் உற்பத்தி செய்யலாம். அதானி நிறுவனம், வேலுார் மாவட்டம், அல்லேரியில், 1,800 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையம் அமைக்க விருப்பம் தெரிவித்தது. அந்நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை, பசுமை எரிசக்தி கழகம் பரிசீலித்து வந்தது. அதன் அடிப்படையில், விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. அதானி நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் ஆணை, கோவையில் வரும், 26ம் தேதி நடக்கும் அரசு விழா வில் வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது. ஒரு மெகா வாட் நீரேற்று மின் திட்டத் திற்கு சராசரியாக, 6.50 கோ டி ரூபாய் செலவாகும். மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் சாரத்தை, மின் வாரியம் வாங்கும்.
4 minutes ago
17 minutes ago
20 minutes ago
23 minutes ago