உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் ஸ்டிரைக்கிற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

பஸ் ஸ்டிரைக்கிற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை : திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:காலியாக உள்ள டிரைவர், கன்டக்டர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் ஜன., 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை. இதனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேலைநிறுத்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: இதுபோன்ற ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் இன்று (ஜன.,10) ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ