உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி பற்றி கவலை வேண்டாம்: இ.பி.எஸ்.,

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ லோக்சபா தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். அதுகுறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கூறியுள்ளார்.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கட்சி நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இ.பி.எஸ்., கூறியதாவது: நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மாவட்ட செயலாளர்கள் களைய வேண்டும். அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குட்பட்ட லோக்சபா தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். மாற்று கட்சியில் உள்ளவர்களை அதிமுகவில் இணைக்க கவனம் செலுத்தி மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். அதிமுக நிர்வாகிகள் கருத்து வேறுபாடு இன்றி செயல்பட வேண்டும். லோக்சபா தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். அதுகுறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு கட்சி நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vaiko
ஜன 09, 2024 22:15

புரட்சி பாரத கட்சி ஒன்றே போதும், நாற்பதும் நமதே.


முருகன்
ஜன 09, 2024 16:31

ஏனெனில் கட்சி தோற்றாலும் இவருக்கு பிரச்சினை இல்லை


Suppan
ஜன 09, 2024 16:15

பழனிச்சாமி மாறினாராமே


vadivelu
ஜன 09, 2024 14:28

இந்த முறை பலமான அடி விழும்.புத்தி தெளியும்.


கண்ணன்,மேலூர்
ஜன 09, 2024 13:44

ஏன்டா (பாஜக) போன்ற நல்ல பயல்களோட சகவாசத்தை விட்டுட்டு கெட்ட பயல்களான சகவாசம் ஒனக்கு தேவையாடான்னு எங்க அம்மா எனக்கு கால்ல சூடு வச்சிட்டாங்க அதான் புண்ணு ஆறுவதுக்குள பேசாம நல்ல பசங்களோட சேரலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..????


செந்தமிழ் கார்த்திக்
ஜன 09, 2024 13:12

அப்பறம் ஒவ்வொரு MP சீட்டுக்கும் 30 கோடி. தேர்தல் செலவும் அவங்க தான் பண்ணனும் மறந்துடாதீங்க.


Godyes
ஜன 09, 2024 12:58

இபிஎஸ் கூட்டத்தினரை பார்த்து தொடங்க வேண்டிய முன்னுரையை. மக்களை கவரும் வகையில் தெரிவு செய்ய வேண்டும். எம்ஜியார் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே கலைஞர் என் உயிரினும் மேலான என் இனிய உடன் பிறப்புக்களேஇந்த. மாடலில் இருக்கவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை