உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வுக்கு 10 தொகுதி தைலாபுரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து

பா.ம.க.,வுக்கு 10 தொகுதி தைலாபுரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து

திண்டிவனம்: பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு, 10 தொகுதிகளை ஒதுக்கி இரண்டு கட்சிகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், நேற்று முன்தினம் மாலை கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.தொடர்ந்து நடந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என, முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் நேற்று காலை, 6:40 மணிக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர். அவர்களை பா.ம.க., நிர்வாகிகள் வரவேற்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு அண்ணாமலை சால்வை அணிவித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார்.தொடர்ந்து, ராமதாசின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்தும் ஆசி பெற்றார். அதை தொடர்ந்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் ராமதாசும், அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
மார் 20, 2024 10:06

பாமக பாஜக கூட்டணியை கொள்கை கூட்டணி என்று இரு தரப்பினரும் சொல்வார்களே பாஜக ஆட்சிக்கு பூஜியத்துக்கும் கீழேதான் மார்க் கொடுப்பேன் என்றும் வாய் கிழிய மோடியை வசைபாடிக்கொண்டும் இருந்த பாமகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது என் பார்வையில் வெட்கங்கெட்ட செயல் மகனுக்கு மந்திரி பதவி என்று சொன்னால் பாமக திமுகவுடன் கூட்டு சேர்ந்திருக்கும்.


சொல்லின் செல்வன்
மார் 20, 2024 09:23

இந்தியாவில் இருக்கிற எல்லா கட்சிகளுடனும் கூட்டு வைத்த ஒரே பேரியக்கம் நம்ம மாம்பழம்


J.V. Iyer
மார் 20, 2024 07:21

அதில் இரண்டு தொகுதி கேரளாவிலும், நான்கு தொகுதி கர்நாடகாவிலும் உள்ளது இவர்களுக்கு தெரியுமா?


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி