மேலும் செய்திகள்
போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க க்யூ ஆர் குறியீடு
5 minutes ago
நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு
14 minutes ago
கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை
25 minutes ago | 1
சென்னை: அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பிறகு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார்.லோக்சபா தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இன்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்தார். அவரை, தே.மு.தி.க.,வின் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.இந்நிலையில் இன்று( மார்ச் 20) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இபிஎஸ்., -ம், பிரேமலதாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். தே.மு.தி.க.,வுக்கு திருவள்ளூர்( தனி) , மத்திய சென்னை, கடலூர்,தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதன் பிறகு நிருபர்களிடம் பேசிய பிரேமலதா: அதிமுக., - தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க., உடன் கூட்டணி தொடரும். நாளை முக்கியமான அறிவிப்பு தே.மு.தி.க., அலுவலகத்தில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். பிறகு இ.பி.எஸ்., பேசுகையில், கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க.,வினர் நிறைவேற்றினார்களா? அவர்கள் வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடும். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.விஜயகாந்த் மகன் விருப்ப மனு
தே.மு.திக., சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
5 minutes ago
14 minutes ago
25 minutes ago | 1