உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும் ஆடு புலி ஆட்டம் : பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., மறைமுகம்

அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும் ஆடு புலி ஆட்டம் : பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., மறைமுகம்

சென்னை : அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும், ஆடு புலி ஆட்டம் ஆடி வருகின்றன. 'கூட்டணியில் பா.ஜ., இருந்தால், நாங்கள் வர மாட்டோம்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறுவதால், 'நீங்க வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறைமுகமாக உணர்த்தி வருகிறார். இந்த ஆட்டத்தின் முடிவு அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிய வரும்.தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என, ஆளும் தி.மு.க.,வும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளன. இதனால், தமிழக அரசியல் களம், தற்போதே சூடுபிடிக்க துவங்கி உள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது அமைந்த, தி.மு.க., தலைமையிலான 10 கட்சிகள் கூட்டணி அப்படியே உள்ளது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இப்போது பா.ஜ., மட்டுமே உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், 'மெகா கூட்டணி அமைத்து, தி.மு.க.,வை தோற்கடிப்போம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார்.ஆனால், தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ், வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்க, எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை. அதனால், டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. அப்போது, 'இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்' என்று பழனிசாமி கூறினார். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும், எந்த கட்சியும் அ.தி.மு.க., அணிக்கு வரவில்லை. இந்நிலையில், கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் நடந்த பிரசார பயண கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கம்யூனிஸ்ட், வி.சி., போன்ற கூட்டணி கட்சிகள் மாநாடு நடத்தக்கூட, தி.மு.க., அரசு அனுமதி மறுக்கிறது. 'வி.சி., கொடிக்கம்பம் நட அனுமதி இல்லை. இவ்வளவு அசிங்கப்பட்டும், அவமானப்பட்டும், அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டுமா? அ.தி.மு.க., கூட்டணிக்கு வரும் கட்சிகளை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம். எங்கள் கூட்டணிக்கு பிரமாண்டமான கட்சி வரப்போகிறது' என்றார்.பழனிசாமி கூறிய பிரமாண்டமான கட்சி த.வெ.க., தான் என்றும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க, அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். அதனால் தான், 'தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி' எனக் கூறும் அமித் ஷாவின் கருத்துக்கு மாறாக, 'அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும்' என, திரும்ப திரும்ப பழனிசாமி கூறி வருகிறார்.'பா.ஜ., இருந்தால் நாங்கள் வர மாட்டோம்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறுவதால், பா.ஜ.,வை கழற்றி விட பழனிசாமி தயாராகி விட்டார். அதனால் தான், அமித் ஷாவின் கருத்துக்கு மாறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதன் வாயிலாக, 'நீங்க வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு மறைமுக சேதி சொல்வதாக பலரும் கருதுகின்றனர். இது தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு ஓட்டு வங்கி உள்ள தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வென்றது. இப்போது ராமதாஸ், அன்புமணி மோதலால், பா.ம.க., பழைய நிலைக்கு வருவது சந்தேகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து, வி.சி., கட்சியை இழுக்க முடியவில்லை, எனவே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே, தி.மு.க.,வை தோற்கடிக்க முடியும் என பழனிசாமி உறுதியாக நம்புகிறார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்புகிறார்.அது நடக்காது என்பதால், விஜயை கூட்டணிக்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார். பா.ஜ., இருந்தால் விஜய் வர மாட்டார். விஜய் வருவது உறுதியானால், பா.ஜ.,வை கழற்றி விடவும் பழனிசாமி தயங்க மாட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் துவங்கியுள்ள ஆடு புலி ஆட்டம், தமிழக அரசியலில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது பா.ஜ., அதை முறியடிக்குமா என்பது, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 83 )

T.S.Murali
ஆக 06, 2025 14:29

தமிழ் நாட்டில் பிஜேபி என்ற கட்சியை விரட்டி அடிப்போம் . தில் இருந்தால் யாரையும் மிரட்டாமல் தனியாக நின்று நோட்டாவை ஜெய்க்கட்டும். பிஜேபி உடன் கூட்டணி என்பது பாரங் கல்லை காலில் கட்டி கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம்.


Krishnamurthy Venkatesan
ஆக 05, 2025 13:21

அரசியல் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தலில் களம் காணுவேன் என்று சொன்ன சூப்பர்ஸ்டாரையே சன் pictures அண்ணாத்தே MOVIE சினிமாவில் நடிக்கும்போது பின் வாங்கவைத்தவர்கள் அரசியல் களத்தில் இருந்து விஜயை விரட்ட வெகு சிரமம் இருக்காது. கமல்ஹாசனை போல் சரண்டர் ஆகிவிடுவார் என தோன்றுகிறது. எதற்கும் தனித்து நிற்க பிஜேபி தயாராக இருக்க வேண்டும். அண்ணாமலையை முன் நிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும். அண்ணாமலை தலைமையை ஏற்க தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது நேர்மையை விரும்பும், போதை இல்லாதா சமூகத்தை விரும்பும், காவல் துறையையும், அறநிலைய துறையையும் சரியாக நிர்வகிக்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள்ளும் பெரியோர்களும் தயாராக எழுச்சியுடன் உள்ளனர்.


Bala
ஆக 01, 2025 09:00

Annae Neenga first ADMK + TVK Ku vote poduveengala promise pannunga. Neenga pooda maateenga yean na neenga 200 UP . Ungalukku ADMK+BJP alliance ah destroy pannanum orae target ithu thaan


S.V.Srinivasan
ஆக 01, 2025 08:29

என்னைப்போல் சாதாரண பி ஜே பி ஆதரவாளர்ளுக்கு ஆரம்பித்திலிருந்தே அதிமுக வின் கூட்டணியில் விருப்பம் இல்லை. தி மு க அதிமுக இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள். இப்பவும் காலம் கடந்து விடவில்லை பி ஜே பி அதி மு க உடனான கூட்டணியை விட்டு வெளிவந்து வரும் சட்டசபை தேர்தலில் தனியாக நின்று சென்ற தேர்தல் போல் 4 அல்லது 5 செஅட் கிடைத்தால் கூட போதும். பி ஜே பியின் தனித்துவத்தை நிலைநாட்டலாம். மத்திய தலைமை செய்வார்களா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 26, 2025 19:52

ஆடீம்கா கூட்டணியில் பாஜாக்காக்கே இடமில்லைன்னு பயனிச்சாமி சொல்லிக்கிட்டு இருக்குறாரப்பூ. த.வெ.க க்கு இடம் தரணும்ன்னா, பாஜாக்காவை கழட்டி விடணும், ஓகேவா?


avvaiyar
ஜூலை 23, 2025 12:07

2016 எலெக்ஷனில் ஜெயலலிதா CM ஆக மக்கள் விரும்பி வோட் போட்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். மக்கள் வோட் போட்டு EPS CM ஆகவில்லை, சென்டரில் BJP துணை செய்ததால் 2021 வரை ஆட்சி செய்ய முடிந்தது தமிழ் நாடு அறியும் 2021 இல் EPS அதிமுகவின் CM candidate ஆனால் மக்கள் வோட் போடவில்லை, அப்போதே அமித் ஷா பேச்சை கேட்டு கூட்டணி ஆட்சி என்று சொல்லி தேர்தல் சந்தித்து இருந்தால் EPS வெற்றி பெற்று முதல்வர் ஆக வந்து இருப்பார் 10 தோல்வி EPS என்ற பெயர் வந்து இருக்காது


மூர்க்கன்
ஜூலை 22, 2025 15:56

குரு மூர்த்தி இவருக்கு பாஜகவில் எந்த பங்கும் பதவியும் இல்லையென்றாலும் வட நட்டு ஜண்டா எந்த அஜெண்டாவா இருந்தாலும் இவரு வீட்டுக்கு போயி ஆலோசனை செய்யும் மர்மர் தான் என்ன??


Sivasankaran Kannan
ஜூலை 22, 2025 11:12

பேசாமல் அண்ணாமலை ஒரு தனி கட்சி ஆரம்பித்து களம் காணலாம்.


Muthukrishnan Srinivasan
ஜூலை 21, 2025 17:51

செய்தி ஊடகங்களில் பணிபுரியும் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பும் அனைத்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களும். அதிமுகவின் விருப்பமான தேர்வாக தவக உள்ளது என்று பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள். தவக வாக்கு சதவிகிதம் ஒரு ஊகம் மட்டுமே.


Matt P
ஜூலை 19, 2025 21:25

இரு திராவிட கட்சிகளுக்கு திருப்பி திருப்பி கொடுத்து ஊழலுக்கு அடித்தளம் போட்டு திருட்டு கூட்டத்தை கோட்டீஸ்வரர்களாக்கி அப்பாவிகள் அதிகார வர்க்கத்தால் கொலை செய்யப்படலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாச்சு. தேசிய கட்சி ஒன்றுக்கு அதுவும் பிஜேபிக்கு வாய்ப்பு கொடுத்து நாட்டை தமிழ்நாட்டை முன்னேற்ற முடியுமா? என்று மக்கள் முயற்சிக்கலாம்.


முக்கிய வீடியோ