மேலும் செய்திகள்
நாட்டை காக்கும் பொறுப்பு திமுகவுக்கு உண்டு: முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 19
தமிழகம் தலை நிமிர பயணம் புதுக்கோட்டையில் நிறைவு: நயினார்
6 hour(s) ago | 1
புதிய கட்சி தொடங்கினார் ஓபிஎஸ்
9 hour(s) ago | 34
சென்னை: நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்ற சர்ச்சை எழுந்ததை அடுத்து சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு உள்ளார்.லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் இரண்டு கட்டங்களாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்தார். அதில், திருநெல்வேலி தொகுதியில் சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார். இவர், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்கேநகரில் போட்டியிட்டவர். சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு உடனடியாக சீட் வழங்கப்பட்டது அ.தி.மு.க.,வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் நெல்லை தொகுதி வேட்பாளராக ஜான்சிராணி நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். ஜான்சிராணி, அதிமுக செயற்குழு உறுப்பினராகவும், நெல்லை புறநகர் மாவட்ட இணைச்செயலாளர் ஆகவும் உள்ளார். திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.
4 hour(s) ago | 19
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 34