உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் சட்டசபை தேர்தலில் தோற்றால் அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியாது

வரும் சட்டசபை தேர்தலில் தோற்றால் அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியாது

சென்னை:''பா.ஜ., கூட்டணி இல்லாவிட்டால், அ.தி.மு.க.,வால் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடியாது,'' என, அ.தி.மு.க.,வை சேர்ந்த, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.அவரது பேட்டி:அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அதற்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, என்னை வேலைவெட்டி இல்லாதவர் என விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், எனது சேவை, தியாகத்தை அங்கீகரித்தனர். கட்சி பதவிகளை கொடுத்தனர்.சேவை செய்யும் என்னை, வேலை வெட்டியில்லாதவர், சமூக அக்கறை இல்லாதவர் எனக் கூறும் முனுசாமி, சேவை, மனிதநேயம் குறித்து எதுவும் தெரியாதவர். தனக்காகவும், குடும்பத்திற்காகவும் இருக்கிறார் என்பதற்கு, இதைவிட வேறு சான்று தேவையில்லை.இது வரை மனிதநேயம் அறக்கட்டளை வாயிலாக, 50,000 இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். முழுக்க முழுக்க சமூக அக்கறையோடு, சேவை செய்வதையே, முழுமூச்சாக கொண்ட வாழ்ந்து வருகிறேன். என்னை வேலை வெட்டி இல்லாதவர் என விமர்சிப்பவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பதற்கு லாயக்கில்லாதவர்கள். இவர்களைப் பற்றி முழுக்க அறிந்தவன். எனவே, என்னிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். இவர்களை விமர்சனம் செய்தால், அ.தி.மு.க.,வுக்கு அவமானம் ஏற்பட்டு விடுமே என்பதற்காக அமைதியாக இருக்கிறேன்.கடந்த 2021-ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தால், 26 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அ.தி.மு.க.,வுக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்து அச்சமாக இருக்கிறது. எனவே, அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை, ஒன்று சேர்க்க வேண்டும். மத்திய அரசின் அதிகாரம் அரணாக இருந்தால்தான், வரும் சட்டசபை தேர்தலை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள முடியும். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணியை உடனே அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், மாநில அரசின் அதிகாரம், வலுவான கூட்டணி, எல்லையற்ற பணத்தின் முன்பு காணாமல் போய்விடும். வரும் சட்டசபை தேர்தலில் தோற்றால், அ.தி.மு.க.,வை யாராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை