UPDATED : நவ 21, 2023 07:09 PM | ADDED : நவ 21, 2023 06:32 PM
சென்னை: பொங்கல் பண்டிகை நிறைவுற்றதும் தமிழகம் முழுதும்சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த பழனிசாமி டிச. 3-க்கும் பூத் கமிட்டி பணிகளை முடிக்க மாவட்ட செயலர்களுக்கு அ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவி்ட்டுள்ளார்.அ.தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் இன்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழனிசாமி கூறியது, வட மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகளை டிச.03-ம் தேதிக்குள் முடித்துவிட்டு ஜனவரி மாதம் தேர்தல் பணிகளை துவக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நிறைவுற்றதும் தமிழகம் முழுதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.பழனிசாமி உடன் விஜயபாஸ்கர் ஆலோசனை
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த உடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.