உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிசம்பர் 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது!

டிசம்பர் 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிச.,10ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடக்கிறது என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், டிசம்பர் 10ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சட்டசபை தேர்தல் வியூகம், கூட்டணி தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.பின்னணிகட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், சமீபத்தில் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதற்காக அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.இந்நிலையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா உடன் இணைந்து பேட்டி அளித்து, நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினார்.இத்தகைய சூழ்நிலையில் தான், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார் இபிஎஸ்., வரவிருக்கும் சட்டசபை தேர்தல், கூட்டணி தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை