உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உளுந்துார்பேட்டையில் ஏர்போர்ட்?

உளுந்துார்பேட்டையில் ஏர்போர்ட்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார் பேட்டை நகர் பகுதியில், இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட விமானப்படை தளம் கைவிடப்பட்ட நிலையில், விமான ஓடுதளம் அமைந்திருக்கும் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை, தமிழக தொழில் வளர்ச்சி கழகமான, 'டிட்கோ' மேற்கொண்டுள்ளது. விமானப்படை தளம், 35 ஏக்கரில் அமைந்துள்ளது. விமான நிலையத்திற்கு, 80 ஏக்கர் தேவைப்படும் என்பதால், தனி நபர்களிடமிருந்து, 48 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, மொத்தம், 83 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை, 'டிட்கோ' மேற்கொண்டு உள்ளது.சமீபத்தில் வருவாய் துறை சார்பில், திருக்கோவிலுார் சப் - கலெக்டர் ஆய்வை தொடர்ந்து, டிட்கோ திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் அனுமதி கிடைத்து விட்டால், விமான நிலையம் அமைவது உறுதியாகும்.சென்னை --- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால், பயணியர் எளிதாக விமான நிலையத்தை சென்றடைய முடியும். அத்துடன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், நெய்வேலி, விருத்தாசலம், திருக்கோவிலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு மையப்பகுதியாகவும் உள்ளது. இதன் அருகில் தான், ஆசனுார் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. எனவே, தொழில் வளத்தில் பின் தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, தொழில் துறையினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை