உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்: ஜெயக்குமார் ஆசை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்: ஜெயக்குமார் ஆசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை போல, அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்; அப்போதுதான் தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என சுதாரித்துக்கொள்ளும்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுப்பதில்லை, கொடிக்கட்ட அனுமதிப்பதில்லை. ஜனநாயக குரல்வலையை நெரிக்கின்றனர். சட்டசபையிலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய விவகாரத்தை பற்றி விவாதித்தால் என்ன? விவாதித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் திமுக.,வுக்கு பயம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு என்ற நிலைபாடை எடுத்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் அதேபோல், இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆட்சியாளர்களுக்கு புத்தி வரும்; தேர்தல் ஆணையமும் சுதாரித்துக்கொள்ளும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தால் நியாயமான, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M Ramachandran
ஜூன் 26, 2024 20:41

அது என்ன உஙகள் தலைவர் ஆசையா ஓஹோ பங்காளிக்கு விட்டு கொடுக்கும் ஆவலா


M Ramachandran
ஜூன் 26, 2024 20:34

உஙக தலைவர் தீ மு க ஜெயிக்கா வேண்டுமென்று ஆசை படுகிறார். என்ன அல்வா கொடுத்தாலும் பங்காளிகள் அல்லவா. பாராளுமன்றத்தில் நன்றி காட்டினார் இதற்கும் நன்றி காட்டுகிறார்


bal
ஜூன் 26, 2024 20:03

உனக்கு புததி இல்லேன்னா ஏன் எல்லாரும் நீ சொல்வதை கேட்கணும்.


raja
ஜூன் 26, 2024 16:59

மக்களுக்கு வரவேண்டிய ருவா ரெண்டாயிரத்துக்கு ஆப்பு வைகிரார் பாருங்கள்...


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 16:31

உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால்..... அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்ங்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்... அதை விடுத்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பங்காளி திமுக கட்சிக்கு ஆதரவாக கூறுவதை பார்த்தால்..... நீங்கள் திமுக B டீம் என்பது உண்மை தான் போல் தெரிகிறது.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 16:27

பழனிசாமி முதல்வராக இருந்த போது.... பிரதமர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டியவர்கள் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்... அப்போது அவர்களை முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் அவர்கள் திருந்தி இருப்பார்கள்.


Jysenn
ஜூன் 26, 2024 16:09

Admk will ignomously forfeit the deposit if it cons. This is the reason the dead and decaying party chose not to con. Admk is in the grave with Jayalalitha at the Madras beach. The present admk is surviving on the so called artificial respiration provided by the corrupt money. That illicit and illegal money will not last long and hence admk too will not last long.


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 15:55

மக்கள் நலனில் அக்கறையில்லையா? யாராவது எதிர்த்து நின்றால்தானே நல்லது?


Ramaswamy Jayaraman
ஜூன் 26, 2024 15:47

தெரிந்த தேர்தல் முடிவு. எதற்க்காக மற்ற கட்சிகள் போட்டியிட்டு தோல்வியை தழுவவேண்டும். போட்டியிடாமல் தேர்தல் செலவுகளை தவிர்க்கலாம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 26, 2024 14:34

தோல்வி பயத்தில் உளருகிரார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை