உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் அனைவரும் ராமதாஸ் பக்கமே

வாக்காளர் அனைவரும் ராமதாஸ் பக்கமே

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடந்த 45 ஆண்டு காலமாக கட்சியின் பொறுப்பாளர்களை நியமிப்பதையும், நீக்குவதையும் செய்து வருகிறார். தலைவர் முதல் கிளைச் செயலர் வரை பொறுப்பாளர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே.ராமதாசை திட்டுவதற்காகவே சமூக ஊடக பேரவையை சேர்ந்த சிலர் உள்ளனர். அவர்கள் ராமதாஸ் ஆதரவாளர்களையும் விட்டுவைக்கவில்லை. சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றனர். வாக்காளர்கள் அனைவரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர். ராமதாசுடன் இருப்பவர்கள் விசுவாசிகள் கூட்டம். ஆனால், இன்றைக்கு பதவிக்காக அப்பாவை விட்டு அன்புமணி செல்வது சரியல்ல. எதிர்காலத்தில் அன்புமணி ஒரு தவறான உதாரணமாகி விடுவார் என்ற பயம் உள்ளது. அப்பாவிற்கு மகன் கட்டுப்பட மாட்டேன் என்ற அன்புமணியின் போக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். அதற்கு அன்புமணி ஆளாகிவிடக்கூடாது.- அருள், எம்.எல்.ஏ., - பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 08:59

வாக்காளர்கள் அனைவரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர். இது உருட்டிலேயே புது உருட்டாய் ..பெரிய உருட்டாய் .. உலக தரம்மிக்க உருட்டாய் இருக்கிறது ..அப்போ அதிமுக, திமுகவிற்கு ஒருவாக்காளர் கூடஇல்லாமல் வாக்காளர்கள் அனைவரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பக்கம் இரவோடு இரவாக வந்துவிட்டார்களா? இது இந்தியாவில் உள்ள வாக்காளர்களுக்கு மட்டுமா? அல்லது அமெரிக்க , ரஷ்ய , ஆப்ரிக்க , ஆஸ்திரேலிய வாக்காளர்களுக்கும் பொருந்துமா ? தொடர்ந்து உருட்ட வாழ்த்துக்கள் ,...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை