உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேலும் குறைந்த தங்கம் விலை; சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு கீழ் சென்றது

மேலும் குறைந்த தங்கம் விலை; சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு கீழ் சென்றது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கான சுங்க வரியை குறைத்து அறிவித்ததன் மூலம் நேற்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்த நிலையில், இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.51,920க்கு விற்பனையாகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ha7ma83l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. ஜூலை 17ம் தேதி, சவரன் விலை 55,360 ரூபாயாக அதிகரித்தது. பின், விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் (ஜூலை 22) சவரன், 54,600 ரூபாய்க்கும், நேற்று (ஜூலை 23) காலை 54,480 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 95.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த நிதி அமைச்சர், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் குறைந்து 6,550 ரூபாய்க்கு வந்தது. சவரனுக்கு அதிரடியாக, 2,200 சரிந்து, 52,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3.10 ரூபாய் குறைந்து, 92.50 ரூபாய்க்கு விற்பனையானது.இன்று தங்கம் விலை மேலும் குறைந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து, 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.52 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

peria samy
ஜூலை 24, 2024 15:00

ஏப்ரல் முதல் வாரத்தில் விற்ற விலைக்கு இறங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் மறுபடியும் ஏறி தற்போதைய விலைக்கு விற்கும்


G.jayalakshmi
ஜூலை 24, 2024 12:39

Very nice to learn about gold and silver now cheap due to the budget. But the commodities of essential is too high. Every mother wants to give good food for their children . Now it is impossible to feed children. Pl give priority for this.


Karuthu kirukkan
ஜூலை 24, 2024 11:07

அப்படியா ..மகிழ்ச்சி ..அப்படியே வீட்டு முகவரி, டோர் நம்பர். எல்லா விபரங்களும் இங்கே பதிவு பண்ணிட்டு போ ...அப்புறம் FM லிருந்து பேசுவானுக ..டோர் கிப்ட் தருவானுக ...அப்புறம் ஏட்டைய்யாவ பார்க்க வேண்டியது தான்...ஐயோ ஐயோ இன்னும் முடியல


V Kuppan
ஜூலை 24, 2024 10:21

நடுத்தர குடும்பங்கள் தங்கத்தை வாங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இன்று நாங்கள் தங்கம் வாங்க செல்கின்றோம்


Karuthu kirukkan
ஜூலை 24, 2024 13:32

அப்படியா ..மகிழ்ச்சி ..அப்படியே வீட்டு முகவரி, டோர் நம்பர். எல்லா விபரங்களும் இங்கே பதிவு பண்ணிட்டு போ ...அப்புறம் FM லிருந்து பேசுவானுக ..டோர் கிப்ட் தருவானுக ...அப்புறம் ஏட்டைய்யாவ பார்க்க வேண்டியது தான்...ஐயோ ஐயோ இன்னும் முடியல


Cms Sureshkumar
ஜூலை 24, 2024 10:14

தங்கத்தின் மீது வரியை குறைப்பதால் சாமானிய மக்களின் வரி சுமை குறையாது அதற்கு பதில் பெட்ரோல் டீசல் மற்றும் உணவு பொருள்களின் விலை குறையும் படி ஏதாவது செய்திருக்கலாம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி