| ADDED : ஜன 30, 2024 10:39 AM
சென்னை: சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை மகாத்மா காந்தியின் லட்சியங்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.