மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பில் தமிழகம் முன்னோடி அரசு பெருமிதம்
28-Jul-2025
சிவகங்கை: தமிழக பொது வினியோகத்திட்டம் சிறப்பாக இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார் என சிவகங்கை அருகே ஒ.புதுாரில் வீடு தோறும் ரேஷன் பொருள் வழங்கும் விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பெருமையாக குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் 12 சதவீதமும், உயர்கல்வியில் 52.5 சதவீதமும் எட்டியுள்ளது. மாநில அளவில் உள்ள 37,000 ரேஷன் கடைகளில் 2.25 கோடி கார்டு தாரர்கள் மானிய விலையில் உணவுப்பொருட்களை பெறுகின்றனர். மேலும் 2400 பகுதி, முழு நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டில்லியில் நடந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்கள், செயலர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் உள்ள பொது வினியோகத்திட்ட நடைமுறையை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றார். வீடு தோறும் ரேஷன் உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் தாயுமானவன் திட்டத்தை' துவக்கியுள்ளோம். இத்திட்டத்திற்காக கூடுதலாக ஆண்டுக்கு ரூ.30 கோடி செலவாகும். உணவு மானியத்திற்காக மட்டுமே ரூ.10,500 கோடி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் மாநில அளவில் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயன் அடைகின்றனர். இவ்வாறு பேசினார்.
28-Jul-2025