உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வரும் 4ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை

 வரும் 4ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை

திருச்சி: ''திருச்சியில், வரும் 5ல் நடைபெறும் மோடி பொங்கல் விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார்,'' என, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் முருகானந்தம் தெரிவித்தார். நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதன் நிறைவு நிகழ்ச்சி, வரும் 4ல் புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். மறுநாள் காலை, திருச்சியில் 2,000 பெண்கள் பங்கேற்கும் 'மோடி பொங்கல் விழா'வில் பங்கேற்கிறார். அன்றைய தினம், தமிழக பா.ஜ.,வின் உயர்மட்டக் குழு மற்றும் மையக்குழுவைச் சேர்ந்தோரை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் அன்றைய தினம் சேலத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு முருகானந்தம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை