உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு ஞாபக மறதியா, குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி

முதல்வருக்கு ஞாபக மறதியா, குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:கடந்த, 1974ல் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.பின், பல முறை மத்திய அரசின் பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கி கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மவுனம் மட்டும் சாதித்து கொண்டிருக்கும் தி.மு.க.,வுக்கு, தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில், தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.இலங்கை போரின் போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், மத்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியாகவும் இருந்த தி.மு.க., நடத்திய, மூன்று மணி நேர உண்ணாவிரத கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டனர் என்று, ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்.அதன்பின்னர் தான், நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த தி.மு.க., தமிழக மீனவர்கள் உயிரை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை வெறும்மவுனமே. கடந்த, 2014ல் இலங்கை அரசால், தமிழக மீனவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, தி.மு.க., அன்றும் மவுனமாக தான் இருந்தது.அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் நரேந்திர மோடி அரசு. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகின்றனர்.அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல்,சட்டபாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாரத நாடும், நம் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கி விட்டு, 50 ஆண்டுகள் மவுனமாக இருந்து விட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்து பேசும் ஸ்டாலின், சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல, குற்ற உணர்ச்சியா?இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Krishnamurthy Venkatesan
மார் 17, 2024 14:31

இதைப்பற்றி எல்லாம் திமுக விடம் கேட்க மீடியாக்கள் முயற்சி கூட செய்ய மாட்டார்கள். அவ்வளவு மரியாதை (பயம்)


Krishnamurthy Venkatesan
மார் 17, 2024 14:25

ஓவியா விஜயாவின் கருத்து முதிர்ச்சியற்றதாக இருக்கிறது. அண்ணாமலையின் கேள்விக்கும் விளக்கத்திற்கும் பதில் சொல்லாமல், வெங்காயத்தின் இரண்டாவது தோல் மாதிரி உளறக்கூடாது.


bal
மார் 17, 2024 12:38

நீங்க உங்கள் தெம்பை வீணடிக்கிறீர்கள். மக்கள் ஒன்று வோட் போட வரமாட்டார்கள்..சென்னை பதர்கள் ஐம்பது விழுக்காடு வோட்டை போடவில்லை..அதனால் தான் சென்னை மேயர், உதயநிதி எல்லோரும் வென்றதன் காரணம். குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டு வாங்கினவர்கள் மட்டும் வோட்டு போட்டனர். இல்லேன்னா திரைப்பட விசிறிகள் இடமிருந்து ஒன்னும் கிடைக்கலேனாலும் கண்டவனுக்கும் வோட்டு போடும்.


bal
மார் 17, 2024 12:36

yen ippadi energy waste panringa..neenga ketta yedhavadhu kelviku badhil kidaithadha..illai makkal puratchi seidhu stalin veetuku munnal nindranara..makaluku thevai quater, biriyani matrum dhuttu...illene vote poda kooda varamattanga..


Oviya Vijay
மார் 17, 2024 12:27

ஒரு அரசியல் முதிர்ச்சி என்பதே அண்ணாமலையிடம் சுத்தமாக இல்லை... கூடிய விரைவில் ஒரு காமெடி பீஸ்ஸாக மட்டுமே தமிழக மக்களுக்கு அறியப்படப்போகும் ஒரு கேரக்டர்... அவ்வளவே...


sridhar
மார் 17, 2024 13:18

அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன


Saai Sundharamurthy AVK
மார் 17, 2024 12:05

அண்ணாமலை சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ????????????


தமிழன்
மார் 17, 2024 12:54

7+3=11


Sridhar
மார் 17, 2024 11:53

மக்கள் எவ்வளவு தூரம் திருட்டு திராவிடிய கும்பலய் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது இந்த தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். இப்போதும் இந்த திருட்டு கும்பலுக்கு அதிக வோட்டளித்து ஜெயிக்க வைத்தார்கள் என்றால் தமிழகத்தின் நிலை மிக பரிதாபம் தான்.


suresh
மார் 17, 2024 12:24

எவ்வளவு தான் தீய முக தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் தீமைகள் செய்தாலும் , அதை நாம் புட்டு புட்டு வைத்தாலும் , கொஞ்சமேனும் வெட்கப்படாமல் , அஞ்சாமல் , இங்கே அவர்களுக்கு முட்டு கொடுக்கும் ஓவிய விஜய் , செந்தில் கார்த்திக், ஜி எஸ் ராஜன் போன்றவர்களுக்கு இதயம் , மூளை , சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்ற கேள்வி நம் மனத்தில் எழுகிறது . இந்த அளவிற்க்கா , சில திராவிடர்கள் மூளை மழுங்கி விட்டார்கள் ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 11:40

சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் வழிகளை முற்றிலும் அடைத்து விட்டால் தமிழகத்தில் 20% பேர் பிச்சை தான் எடுக்கணும் கேரளாவில் 30% .........


P.Sekaran
மார் 17, 2024 11:38

திமுக வை பற்றி பெரியார் சொன்ன பாணியில் சொல்ல கூச்சமாக உள்ளது. அப்படி இருக்க இவர்கள் பொய்களின் முழு உருவம். எல்லா டிவிகளையும் கையில் வைத்துக்கொண்டு நிமிடத்திற்கு ஒரு முறை மோடி ஒரு முறை வந்தா இருமுறை வந்தார் மூன்றாவது முறை வரமாட்டார் நாற்பதும் நமதே நாடும் நமதே. நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச இடத்தையும் பணத்தையும் மண்ணையும் சுரண்ட நாட்டை கேட்கிறார் கொடுத்து விட்டு வாயில் விரலை வைத்து சூப்பி கொண்டிருக்க சொல்கிறார். அவர் சொல்வதை செய்வார் நமது நாட்டில் அரசுக்கு அடுத்தபடி நீதி மன்றம் இருக்கிறது. நீதிமன்றத்தையும் காசைவைத்துக்கொண்டு பெரிய வக்கீலை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களை காப்பாற்றும் இந்த் அரசு மக்களும் வேண்டும் மக்களும் இவர் பேசியதை நம்பி ஓட்டளிப்பார்கள்


Thirumalaimuthu L
மார் 17, 2024 11:33

பெரும்பாலும் மீன் பிடி படகுகள் என்ற போர்வையில் இலங்கை - இந்திய கடல் எல்லையில் உண்மையில் நடப்பது கடத்தல்... இதில் சில படகுகள் மட்டுமே இலங்கை கடர்பரப்பில் உள் புகுந்து மீன் பிடிகிறது. இந்திய எல்லையில் வந்து எப்போதும் இலங்கை கடற்படை கைது செய்வதில்லை... கடலில் எல்லை தெரியவே GPS எல்லா மீன் பிடி படகுகளிலும் உள்ளது பின் ஏன் பிற நாட்டு எல்லைக்குள் போகிறார்கள்?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி