உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கித் திவாரியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனு: விசாரணை ஒத்திவைப்பு

அங்கித் திவாரியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனு: விசாரணை ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜன.9க்கு ஒத்திவைத்து முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு, இவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த டிச.,1ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கூடுதல் விசாரணை மேற்கொள்ள அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவலும் 2 முறையாக நீட்டிக்கப்பட்டது. ஜாமின் கேட்டும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறையும் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நடக்கும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் விடுப்பில் இருந்ததால் பொறுப்பிலிருந்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அமலாக்கத்துறை தரப்பில் அங்கித்திவாரியை, விசாரிக்க எங்களுக்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, ஜன.,9ம் தேதிக்கு இதன் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Xavier
ஜன 06, 2024 11:39

GMM அவர்களது கருத்தை பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் MLA போன்றவர்களை மாநில போலிசாரும் மற்றவர்கள்ளை மத்திய போலிசும் மட்டும் தான் விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார். பிஜேபி யினர் தங்களை வானிலிருந்து வந்த தேவதூதர்களாக நினைக்கிறார்கள். வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்


இராம தாசன்
ஜன 06, 2024 01:14

இதுவரை அந்த டாக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை - இந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க வில்லை. என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது


vaiko
ஜன 05, 2024 22:56

மோடி, அமித் ஷ், நிர்மலா மற்றும் அண்ணாமலையையே கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் அமலாக்க துறைக்கு உள்ளது.


Perumal
ஜன 06, 2024 03:19

Yes, Former PM Mr N Rao also appeared in front of NEW DELHI ED , what is your problem in this, If any strong evidence or clue is there ,this ED will enquire, This Department comes under President not under Ruling party, Mr Gejriwal 3 times rejected ED notice, even he is former Gazetted officer, he wants to sympathy among the public,


J.Isaac
ஜன 05, 2024 18:06

அமலாக்கத்துறைக்கு ஏன் அவ்வளவு அக்கறை ?


GMM
ஜன 05, 2024 17:33

திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு, மாநில அரசு ஊழியர்கள் மீது மட்டும் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். லஞ்ச தொகை 40 மாக இருப்பதால், டாக்டர் மீது மாநில லஞ்ச ஒழிப்பு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நீதிமன்றத்தில் நேரிடையாக விசாரிக்க முடியாது. திவாரி அடையாளம், சொத்து, பணி நியமனம்.. மாநிலத்தில் இருக்காது. ED தன் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உண்டு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை