உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ஆயிரம் கோடியில் லாபம் பார்க்கும் ஹிண்டன்பர்க் " - அண்ணாமலை திடுக்

"ஆயிரம் கோடியில் லாபம் பார்க்கும் ஹிண்டன்பர்க் " - அண்ணாமலை திடுக்

திருப்பூர் : ‛‛ பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xrye3six&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேசிய கொடி என்றாலே திமுகவுக்கு பிடிக்காது

அனைவரது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது, கடந்த 3 ஆண்டுகளில் சமூக இயக்கமாக மாறி உள்ளது. பிரதமர் கூறியது குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த டூவீலரில் பேரணிக்கு ஏற்பாடு செய்தோம். நாடு முழுவதும் இந்த பேரணி நடக்கிறது. ஆனால், திருப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.தி.மு.க.,வுக்கு தேசியக்கொடி என்றாலே பிரச்னைதான். பேரணியில் பா.ஜ., கொடி இருக்காது. கட்சி பேரணி கிடையாது. தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். தேசியக்கொடி, தங்களுக்கு பிடிக்காது என்பதை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள். வாகன பேரணி அனுமதி மறுப்பு மூலம் அவர்களின் கோபத்தை காட்டுகின்றனர். இதனை அரசு செய்ய வேண்டும், முதல்வர் சொல்ல வேண்டும். முதல்வர், அவரது கட்சி இளைஞரணியை அழைத்து தேசியக்கொடியுடன் பேரணி நடத்த வேண்டும் எனக்கூற வேண்டும். இந்த நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தான் முதல்வராக இருக்கிறார். தனியாக, ஜப்பான் சட்டத்தின்படி தமிழக முதல்வராக இருக்கிறாரா? இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்படிதான் தலைவராக இருக்கிறார்.முதல்வர் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்களாக நாங்கள் செய்கிறோம். இதற்கு அவர்கள் வெறுப்பு காட்டுகின்றனர். பா.ஜ., வாகன பேரணிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கலாம்.தேசியக்கொடியை கொண்டு போகிறதுனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை வரப்போகிறது?

ஹிண்டன்பர்க்

ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதி ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம். செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். செபி நோட்டீஸ் கொடுத்ததற்காக அந்த நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

s.sivarajan
ஆக 13, 2024 00:44

குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை உடனடியாக நிரூபிப்பதுதான் இதற்க்கு தகுந்த பதிலடியாக இருக்க முடியும்.


K.n. Dhasarathan
ஆக 12, 2024 21:12

ஹிண்டன் பார்க் பற்றி பேசினால் அண்ணாமலைக்கும், பொய் ஜே பி இக்கும் ஏன் பற்றிக்கொண்டு வருகிறது ? அவர் செபி யை பற்றி குற்றம் சொன்னால் செபி த்தான் பதில் சொல்ல வேண்டும், இல்லையா ? தவிர செபியின் தலைவர் ஒரு முக்கிய பதவி, பேர் கெடும் வகையில் செய்தி வந்தாலே அவர் சரியில்லை என்று தானே அர்த்தம். ஏன் அவர் ஹிண்டன் பார்க் மீது வழக்கு போடலாமே ? யார் தடுத்தார்கள் ? வேண்டும் என்றுதான் தவறு செய்திருக்கிறார்கள், யார் கேட்கப்போகிறார்கள் ? நம்மைத்தவிர மற்ற எல்லோரும் முட்டால்கள் என்றுதான் நினைத்து அவ்வளவும் நடந்து உள்ளது. செபி தலைவர் பதவி விலகி நிரூபிக்கட்டும், கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்க படவேண்டும்.


Dharmavaan
ஆக 17, 2024 14:19

இது நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கிறது என்றால் உண்மையான குடிமகன் ஆத்திரப்படுவான் .ராகுல் உடந்தையாக இருப்பார்கள்


Dharmavaan
ஆக 17, 2024 14:21

அந்நிய விரோதிகள் திருடன் சொல்லிவிட்டால் உடனே ராஜினாமா செய்ய வேண்டுமா.யார் நம் உள்நாட்டு விஷயத்தில் தலையிட


R.RAMACHANDRAN
ஆக 12, 2024 07:18

இந்த நாட்டின் வளங்கள் யாவும் அதானி அம்பானி போன்றவர்களுக்கே என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்காக தான் அரசாங்கம். மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன.


Nagarajan D
ஆக 12, 2024 10:12

இதற்க்கு முன் எல்லா வளமும் காந்தி குடும்பத்திற்கும் ஜாமீன் செட்டியாருக்கும் ஜெயலலிதா குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் சரத் பவார் குடும்பத்திற்கும் சென்றுகொண்டிருந்தது சரியா? அம்பானி அதானியாவது எதோ தொழில் செய்து அதில் சில பல பேருக்கு வேலை தருகிறார்கள்.. நான் மேலே சொன்ன எந்த அரசியல் வியாதியாவது மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?


Sivak
ஆக 12, 2024 22:37

பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளான அதானி அம்பானி அவங்களோட காசை என்ன செய்யணும்னு இங்க ஒருத்தன் மூத்திர சந்துக்குள்ள உக்காந்து கொண்டு கருத்து போடுவான் .... அவனை மாதிரி ஆகணும்னா என்ன செய்யணும்னு யோசிங்கடா ...


Dharmavaan
ஆக 17, 2024 14:23

உனக்கு என்ன கேடு வந்துவிட்டது.போபர்ஸ் போல ஊழலில் பாதிப்பா


Balasubramanian
ஆக 12, 2024 05:29

பங்கு சந்தையில் நம் இளைஞர்கள் பல கோடி பேர் ஆழம் தெரியாமல் பணத்தை தொலைக்கின்றனர் - ஒரு அமெரிக்க கம்பெனி எதை சொன்னாலும் அது உண்மை நம்மவர்கள் எது செய்தாலும் அது தவறு என்கிற மனநிலை மாற வேண்டும்! இதை உபயோகித்து ஒரு அமெரிக்கன் கம்பெனி இந்திய பங்கு சந்தையில் Option வர்த்தகத்தில் (இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை) மட்டும் ரூ 8300 கோடி லாபம் ஈட்டியது ஒன் பில்லியன் அதாவது 100 கோடி டாலர்! கேட்டால் வர்த்தக ரகசியம் என்றது! அதேபோல் இந்த ஹிணடர்சன்னும் பங்கு சந்தையில் மற்றவரகள் நஷ்டத்தில் லாபம் சம்பாதிக்கும் கம்பெனி! நம்மவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து இன்று ஏன் இந்த வாரம் முழுவதும் பங்கு சந்தையில் எதையும் விற்று வாங்குதல் கூடாது


Ashokan
ஆக 12, 2024 04:00

ஏன்னா அதிக வருமானம் பார்ப்பதால்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 11, 2024 20:48

கல் குவாரி மணல் குவாரி மாமூல் வாங்கும் இவர் பேசுவது விந்தையா உள்ளது


Ashokan
ஆக 12, 2024 03:54

200 ரூபிஸ் கன்பார்ம்


Selvin Christopher
ஆக 11, 2024 18:55

8 லட்சம் அண்ணாமலை, ஹிண்டன் நியூஸ் சரியாய் தப்பான்னு தான் பாக்கணும்.


Ashokan
ஆக 12, 2024 03:51

இந்தியா வளர்வதை பிடிக்காத வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டு குமஸ்தாக்கள் எவ்வளவு கதறினாலும் முடியாது ஏனென்றால் அதானி யின் சேவை உங்களுக்கு தான் அதிகம் தேவை. வேளியே கதறல் உள்ளே கட்டிபுடி வைதியங்கள்


சுலைமான்
ஆக 11, 2024 16:54

இந்த குண்டன்பர்க் போன்ற ஓநாய்களை ஏவி விட்டு இங்குள்ள வாலாட்டிகளுக்கு தீனி போடுகிறான் அமெரிக்கா. இந்தியாவை எப்படியாவது நிர்மூலம் ஆக்க ராவுல் ... மமுதா ... இன்னும் பிற மதமாற்ற சக்திகளை ஏவி விட்டு தனது கைக்கூலிகளை வைத்து ஆள நினைக்கும் துப்பாக்கி கலாச்சார அமெரிக்காவின் பாச்சா பலிக்காது.


அப்புசாமி
ஆக 11, 2024 16:39

இன்னும் ஆக்ஸ்ஃபோர்டு போகலியா?


Barakat Ali
ஆக 11, 2024 16:10

சாப்பிட்டு தெம்பாக மீண்டும் கூச்சல் போட மீண்டும் மீண்டும் வாய்ப்புக்கள் ........


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை