உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழையில் நனைந்த விடைத்தாள்கள்; மதுரை காமராஜ் பல்கலை சொதப்பல்!

மழையில் நனைந்த விடைத்தாள்கள்; மதுரை காமராஜ் பல்கலை சொதப்பல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் கல்லுாரி மாணவர்களின் பருவத்தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.இப்பல்கலை இணைவிப்பு பெற்ற கல்லுாரிகளில் 2024 நவம்பர் தேர்வுகள் முடிந்துள்ளன. தற்போது பல்கலையில் மு.வ.ஹாலில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்காக இந்த ஹாலில் லட்சக்கணக்கான விடைத்தாள்கள் பண்டல்களாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் பெய்த மழையால் ஹாலில் ஒரு பகுதியில் வைக்கப்பட்ட விடைத்தாள் பண்டல்கள்நனைந்ததாக தகவல் வெளியாகியது.இதுதொடர்பாக கன்வீனர் குழு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நனைந்த விடைத்தாள் பண்டல்களை தனியாக எடுத்து உலர்த்தும் நடவடிக்கையை ஊழியர்கள் மேற்கொண்டனர்.பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலையில் செனட், கல்விப் பேரவை, கருத்தரங்குகள் நடக்கும் முக்கிய இடமாக மு.வ.,ஹால் உள்ளது. இதன் பராமரிப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஹாலில் நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தும் போதிய கழிப்பறை வசதி இல்லை. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இங்கு திருத்தி முடிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் கட்டுகள் இதுபோல் மழையில் நனைந்த சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. ஹாலின் சுவர்களில் ஈரமடித்து மழை நீர் இறங்கும் பிரச்னை உள்ளது. இதன் காரணமாக விடைத்தாள் பண்டல்கள்நனைந்திருக்கலாம். ஒரு கவரில் 18 விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும். நனைந்தவை எந்த கல்லுாரிக்கானது என்ற விவரம் தெரியவில்லை. உலர்த்தியெடுத்த பின் விவரம் தெரியவரும் என்றனர்.இதற்கிடையே இப்பல்கலை தேர்வாணையராக கூடுதல் பொறுப்பு வகித்த பேராசிரியர் தர்மராஜ், அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ள இவர் தற்போது மூன்றாவது முறையாக ராஜினமா கடிதம் அளித்துள்ளார். 2020 ல் தேர்வாணையராக கூடுதல் பொறுப்பு ஏற்ற இவர் தற்போது வரை தொடர்கிறார்.இவர் மீது தேர்வாணையர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.அதுகுறித்து கன்வீனர் குழு விசாரணை நடத்திய நிலையில் ராஜினமா கடிதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

subramanian
டிச 15, 2024 21:39

பெயிலில் வெளியே வந்து அமைச்சர் ஆனால் இப்படிப்பட்ட காரியம் செய்வார்


CHELLAKRISHNAN S
டிச 15, 2024 14:15

governor cannot choose the officers of the university. only vice chancellor can be ed by governor that too recommended by the state government. out of the three persons recommended by the c.m. only governor can choose any one of them.


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 15:56

UGC is under union govt, witch could have granted money for upliftment of the buildings no to have water ingression.


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 12:41

பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் கீழ் உள்ளன, அவர் யூனியன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர், ஆனால் மாநில அரசாங்கத்தால் சம்பளம் பெறுகிறார். யூஜிசி மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ளது. இதெல்லாம் தெரியாமல், கேடு கெட்ட விடியல் அரசு என்று எழுதுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.


MUTHU
டிச 15, 2024 12:59

என்ன செய்ய. நான் எல்லாம் ஜனாதிபதியின் கீழ் தான் இருக்கின்றோம். ஆனால் பிரதமரையே சொத்தை சொல்றோம். அதைப்போன்று தான்.


ஆரூர் ரங்
டிச 15, 2024 13:09

அப்புறம் உயர்கல்விக்கான தனி அமைச்சர் என்ன செய்கிறார்? உதை ரசிகர் மன்றப் பொறுப்பு மட்டுமா?


சசிக்குமார் திருப்பூர்
டிச 15, 2024 13:17

எதற்காக விடியல் அமச்சர்கள் பட்டமளிப்பு விழாவுக்கு போறானுக. அங்கேயும் வாழ்க கோசம் போடுவது ஏன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 13:58

கவர்னர் மாநில அரசிடம் இருந்து சம்பளம் பெறுகிறாரா ?? அவர் சம்பளம் பெறுவது மத்தியத் தொகுப்பு நிதியில் இருந்து .... அதை பேணுவது காபினெட் .... அதற்கு அதிகாரம் கொடுத்தது மக்களவை .... இதை நான் உங்களுக்கு ஆறுமாதம் முன்பே எழுதியுள்ளேன் ....


Kumar Kumzi
டிச 15, 2024 14:23

ஓசிக்கோட்டருக்காக திராவிஷ கூமுட்ட கொத்தடிமைங்க முட்டு குடுக்க தயங்க மாட்டான்


ghee
டிச 15, 2024 14:45

அது எப்படி வைகுண்டம் உனக்கு மட்டும் அறிவு மத்திய அரசு, கவர்னர் என்றே போகிறது?? உன் சேகரட்ரி கூட இவளோ கேவலமா சிந்திகட்மாட்டர்


பெரிய ராசு
டிச 15, 2024 20:59

இது ஒரு மாநில பல்கலைக்கழகம் அனைத்து நிதியும் மாநில அரசாங்கமே தர வேண்டும் , மொத்த நிதியும் மத்திய அரசு கொடுத்துவிடும் விடியல் அரசு விடிஞ்சா உடனே அதை ஆட்டையை போட்டுட்டு அதுவும் கொடுக்க மாட்டானானுக .


Venkateswaran Rajaram
டிச 15, 2024 12:26

மூல காரணம் என்னவென்றால் இரண்டு திருட்டு திராவிட கழக கொள்ளையர்களால் தரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள்


VSMani
டிச 15, 2024 12:20

இது காமராஜருக்கு இழுக்கு உண்டாகும் செயல். பருவ தேர்வு எழுதிய அணைத்தது மாணவர்களையும் தேர்ச்சியுற்றவர்கள் என்று அறிவித்து விடுவது நல்லது. மேலும், பேசாமல் இந்த பல்கலை கழகத்தை மூடி விடுவது அல்லது.


MUTHU
டிச 15, 2024 13:00

அப்ளை செய்த எல்லாரையும் பாஸாக்கிவிடுவது தான் சமூக நீதி.


பெரிய ராசு
டிச 15, 2024 11:49

கேடுகெட்ட விடியல் அரசு கடந்த நான்கு வருடமாக நிதி ஆதாரமே கொடுக்காமல் பெருமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தை சீரழித்து விட்டனர்