உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  லேப்டாப், கணினி இறக்குமதிக்கு டிச., 22 முதல் விண்ணப்பிக்கலாம்

 லேப்டாப், கணினி இறக்குமதிக்கு டிச., 22 முதல் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி, லேப்டாப், கணினி, டேப்லெட் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வன்பொருள் இறக்குமதிக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான போர்ட்டல், வரும் 22ம் முதல் செயல்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த போர்ட்டல் அடுத்தாண்டு டிசம்பர் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் அனுமதி, அடுத்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களின் இறக்குமதியை கண்காணிக்கவும், வினியோக தொடர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா ஆண்டுக்கு கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய் மதிப்பிலான லேப்டாப், கணினி, டேப்லெட்களை இறக்குமதி செய்கிறது. இவை பெரும்பாலும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை