உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.,வில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

த.வெ.க.,வில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

சென்னை: த.வெ.க., கட்சி அமைப்பை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ள நடிகர் விஜய் முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து உள்ளார்.கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் மாநில நிர்வாகத்திலும், பல்வேறு பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dz6elkm5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நியமனம்

இந்நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில்,வெ.க., மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கட்சிப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கட்சியானது அமைப்பு ரீதியாக, சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.அவர்களின் விவரம்அரியலுார் - சிவக்குமார்ராணிப்பேட்டை கிழக்கு - காந்திராஜ்ராணிப்பேட்டை மேற்கு - மோகன்ராஜ்ஈரோடு கிழக்கு - வெங்கடேஷ்ஈரோடு மாநகர் - பாலாஜிஈரோடு மேற்கு - பிரதீப் குமார்கடலுார் கிழக்கு - ராஜ்குமார்கடலுார் தெற்கு - சீனுவாசன்கடலுார் மேற்கு - விஜய்கடலுார் வடக்கு - ஆனந்த்கரூர் கிழக்கு - பாலசுப்பிரமணிகரூர் மேற்கு - மதியழகன்கள்ளக்குறிச்சி கிழக்கு - பரணி பாலாஜிகோவை தெற்கு - விக்னேஷ்கோவை மாநகர் - சம்பத்குமார்சேலம் மத்தி - பார்த்திபன்தஞ்சை தெற்கு - மதன்தஞ்சை மத்தி - விஜய் சரவணன்நாமக்கல் மேற்கு - சதீஷ் குமார்மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டக் கழக இணைச் செயலாளர்கள், பொருளாளர்கள், 2 துணைச் செயலாளர்கள் , 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விஜய் தனியாக ஆலோசனை

இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தை தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிய விஜய், கட்சி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். கட்சியின் கட்டமைப்பு, மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் நியமிக்க பணம் வசூல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.

கவர்னர் அழைப்பு

இந்நிலையில், குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்துக்கு விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இதில் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Laddoo
ஜன 25, 2025 08:05

இந்த வெத்து வேட்டு அறிவித்துள்ள நிர்வாகிகளுக்கு கொள்கையோ பிடிப்போ ஏதும் இல்லை. சீக்கிரம் வேறு கட்சிகளில் கரைந்து விடுவர். கேரவன் தலைவரிடம் பேச்சு திறமையோ மற்றும் நிர்வாக திறமையோ இருப்பதாக தெரியவில்லை. கோடி கோடியாக சம்பாரித்ததெல்லாம் வெகு விரைவில் போய் விடும். புஸ்ஸியோ இப்போதே இனங் கண்டு கொண்டு உஷாராகி விட்ட மாதிரி தெரியுது. சங்கீத தான் காப்போதோனும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 24, 2025 19:58

சின்னம் வாங்க எப்போ அப்ளிகேஷன் குடுக்கப் போறீங்க?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 24, 2025 19:58

இன்னும் 101 பேரை சீக்கிரம் கண்டுபிடிச்சி போடுங்க.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 24, 2025 19:57

இவங்க 19 பேருக்கும் வாக்காளர் அட்டை இருக்கான்னும் பாருங்க. ரசிகர்கள் யாரும் இன்னும் எடுத்திருக்க மாட்டாங்க.


Mohammad ali
ஜன 24, 2025 22:14

வைகுண்டா முதல்ல உனக்கு வாக்காளர் அட்டை இருக்கா?


kayra vivek
ஜன 25, 2025 07:31

உங்களுக்கு இருக்கா வை குண்டேஸ் வரன் அவர்களே......, இருந்தால் வெறுமனே வைத்துக்கொள்ளுங்கள் காத்திருங்கள் 2026 வரை ....


தத்வமசி
ஜன 24, 2025 18:43

போடுங்க போடுங்க... தேர்தலுக்கு முன்பு ஒரே குழுவாக பலர் கட்சிதாவி விடுவார்கள். தேர்தலில் வேலை செய்யாமலேயே பொட்டி கிடைத்து விடும். இவனுங்க எல்லாம் விஜய் மீதுள்ள பற்றின் காரணமாகவோ, அரசியலுக்கு வந்து நாட்டுக்கும் மக்களுக்கும் உழைக்கணும் என்றோ வந்ததாக இருந்தால் கட்சி மாறாமல் இருப்பார்கள்.


kayra vivek
ஜன 25, 2025 07:33

இதற்கு பேர் தான் பயம் ... பயத்தினால் வரும் உளறல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை