உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் காங்.,- - தி.மு.க., கூட்டணி உடையும் சொல்கிறார் அர்ஜுனமூர்த்தி

தமிழகத்தில் காங்.,- - தி.மு.க., கூட்டணி உடையும் சொல்கிறார் அர்ஜுனமூர்த்தி

தேவகோட்டை: ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதாக காங்., நிர்வாகியே கூறுவதால் விரைவில் காங்.,- தி.மு.க., கூட்டணி உடையும்,'' என, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பா.ஜ., மாநில சமூக ஊடக பிரிவு பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி தெரிவித்தார்.சிவகங்கை லோக்சபா தொகுதி பொறுப்பாளரான அர்ஜுனமூர்த்தி கூறியதாவது: 84 லட்சம் வீடுகளுக்கு சென்று ராமர் கோயில் அட்சதை கொடுத்து உள்ளோம்.தமிழகத்தில் பா.ஜ., வளரும் கட்சி அல்ல. வளர்ந்த கட்சியாக மாறி இருப்பதை லோக்சபா தேர்தல் நிரூபிக்கும். 2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தலுக்கு இது அச்சாரமாக அமையும். தி.மு.க., வுக்கு இணையாக வலிமை வாய்ந்த கட்சி பா.ஜ., தான்.பிரதமர் மோடிக்கு இணையான தலைவர்கள் எதிர்கட்சிகளின் கூட்டணியில் இல்லை.மறைந்த முதல்வர் ஜெயலலிதா போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டுக்குள் சரியாக வைத்து இருந்தார். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. கட்டுப்பாட்டில் இல்லை.தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாதம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நமக்கு பாதுகாப்பு தரும் ஒரே கட்சி, அரசு மத்திய பா.ஜ., அரசு தான் என கருதுகின்றனர். மக்கள் ஆதரவு பா.ஜ., வுக்கு வர உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை