உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லாமே அவரு விருப்பம்! எதுவுமே தெரியாது! டைவர்ஸ் குறித்து ஆர்த்தி ரவி வாய்ஸ்

எல்லாமே அவரு விருப்பம்! எதுவுமே தெரியாது! டைவர்ஸ் குறித்து ஆர்த்தி ரவி வாய்ஸ்

சென்னை; ஜெயம் ரவியின் விவகாரத்து முடிவு முழுக்க, முழுக்க அவரின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்டது, குடும்ப நலனுக்கானது அல்ல என்று அவரது மனைவி ஆர்த்தி அதிரடியாக குற்றம்சாட்டி உள்ளார்.

காதல் திருமணம்

பிரபல நடிகரான ஜெயம் ரவி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடக்க காலத்தில் இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென பிரச்னை எழுந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

விவாகரத்து

தொடக்கத்தில் அவை மறுக்கப்பட்டாலும் நேற்று முன்தினம் தமது மனைவியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வ அறிவித்தார். நேற்று பிறந்த நாள், அதன் முந்தைய நாள் விவாகரத்து அறிவிப்பு என்று அவரின் வாழ்க்கை விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில் 3வது நாளாக இன்றும் பரபரப்பு தொற்றிக் கொண்டு உள்ளது.

அறிக்கை

விவகாரத்து முடிவு முழுக்க, முழுக்க ஜெயம் ரவியின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்டது. குடும்ப நலனுக்கானது அல்ல என்று அவரது மனைவி ஆர்த்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆர்த்தி ரவி கூறி இருப்பதாவது;

சொந்த முடிவு

விவாகரத்து குறித்து தன்னிச்சையாக ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார். எனக்கும், என் குழந்தைகளுக்கும் தெரியாமல் என்னை பிரிய அவர் முடிவு எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.

மனம் வேதனை

திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கையை கண்டு மனம் வேதனை அடைந்தேன். 18 வருட திருமண வாழ்க்கை இந்த அறிக்கையால் கண்ணியத்தையும், தனித்தன்மையையும் இழந்துவிட்டது.

தவிக்கிறோம்

திருமண பந்தத்தில் இருந்து பிரிவது என்பது முழுக்க, முழுக்க அவரது சொந்த விருப்பத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு. நானும் எனது 2 குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆழ்ந்த மனவேதனையில் உள்ள நான் இதுபற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்.

பொய்கள் உண்மை

தாயாக என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமும் எனக்கு ரொம்ப முக்கியமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் குழந்தைகள் காயப்படுத்தப்படுவதை அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் உண்மை என்று நம்பப்படும் என்பதால் இதை மறுக்க வேண்டியது எனது கடமையாகிறது. இவ்வாறு ஆர்த்தி ரவி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAGADEESANRAJAMANI
செப் 11, 2024 16:03

பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தின் அக்கறையின்மையை காட்டுகிறது.குழந்தைகளுக்காக பரஸ்பரம் புரிதல் வேண்டும்.


kannan
செப் 11, 2024 15:10

18 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து. மனம் விட்டு பேசி முடிவிற்கு வரலாமே . ஜெயம் ரவி என் மதிப்பை இழந்து வாழ்வில் தோல்வி அடைந்து நிற்கின்றார். கடவும் நல்ல புத்தி வழங்கட்டும்.


S S
செப் 11, 2024 15:07

எவ்வளவு கஷ்டங்கள் சிரமங்கள் அல்லது கருத்து வேறுபாடு வந்தாலும் அவற்றை பேசி தீர்த்து கொள்ளலாம். மாறாக தன்னை நம்பி வந்த பெண்ணை பாதிலேயே கைவிடுவது என்பது எக்காரணம் கொண்டும் ஏற்று கொள்ள முடியாதது


N Annamalai
செப் 11, 2024 14:04

பெரிய நடிகர் .சிறிய உள்ளம் .நடித்துக் கொண்டு கூட வாழ்ந்து இருக்கலாம் ,குழந்தைகள் நலனுக்காக


HoneyBee
செப் 11, 2024 14:00

இது எல்லாம் அந்த ஒல்லி ஓணான் செய்த வேலை. சந்துல சிந்து பாடிட்டான். சோசப்பு மற்றும் தனுஷ் ரெண்டும் ஒழிந்தால் நலம்


Matt P
செப் 11, 2024 11:41

பெண் பாவம் பொல்லாதது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை