உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

சென்னை: பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலியாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார்.தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்படுகிறார். அவருக்கு பதில்,சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த அருண் சென்னை புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்படுகிறார்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

விமர்சனம்

கடந்த 5ம் தேதி இரவு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அம்ஸ்டிராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக, மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இச்சூழ்நிலையில், சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Yaro Oruvan
ஜூலை 11, 2024 14:21

ஹா ஹா சிலையை தொறந்து வச்சு காவிரி நீர் பிரச்சனைய தீத்த பரம்பரை ஆச்சே.. ஒவ்வொரு வாட்டி கொலை கொள்ளை நடக்கும்போது போலீஸ்காரன் மட்டும் மாத்துனா போதும் ... அஞ்சு வருஷம் ஆண்டு அனுபவம் ..


Ramesh Sargam
ஜூலை 10, 2024 17:47

கொலைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். அதை செய்யாமல் போலீஸ் உயர் அதிகாரிகளை இட மாற்றம் செய்வது எப்படி சரி ஆகும்?


sethu
ஜூலை 10, 2024 09:16

அட முட்டாள் தமிழா முடி மூளை இல்லாதவன் அவனை மாற்றுவதை விட்டுவிட்டு இப்படி அதிகாரிகளை மாற்றுவதால் பொது மக்களுக்கு என்ன நன்மை ?


Manikandan Pennadam
ஜூலை 10, 2024 06:53

நிச்சயமாக சட்டம்-ஒழுங்கு சீராகிவிடும்.பிரச்சினைகள் குறையும்.


பெரிய ராசு
ஜூலை 09, 2024 20:50

டேவிட்சன் தேவாசிர்வாதம் இவரு பெரிய லார்டு லாபக்கு தாசு போஇங்க


மோகன்
ஜூலை 09, 2024 12:57

எங்களையெல்லாம் முட்டாளாவே நினைச்சுட்டீங்க இல்ல. கமிஷனரை மாத்திட்டா எல்லாம் சரியாயிடுமா.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 12:16

தளபதியை புலிகேசி மன்னர் மாற்றிவிட்டார்... இனி வல்லரசு ஆகும் ....


ஹிந்துஸ்தானி
ஜூலை 09, 2024 00:30

டீக்கடை வெக்கலாம். பரோட்டா, பகோடா விக்கலாம். கௌரவமா இருக்கும்.


இராம தாசன்
ஜூலை 08, 2024 23:08

திருச்சபையின் ஆசீர்வாதம் - இனி சட்டம் ஒழுங்கு ஒரு சமூகத்துக்கு எதிராக நன்றாக வேலை செய்யும்


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 08, 2024 18:43

அய்யா சாமீ இவ்வளவு சீக்கிரமா இந்த பயங்கரமான தண்டனை ஆகாது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ