உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜோதிடர் ஆகிவிட்டார் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் விளாசல்

ஜோதிடர் ஆகிவிட்டார் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் விளாசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., கொள்கை கூட்டணி. தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்வதால் இ.பி.எஸ்., பொறாமையில் பேசுகிறார். அவர் ஜோதிடர் ஆகிவிட்டார்' என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த, கட்சி நிர்வாகி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க., என்றும் மக்கள் பணியில் இருக்கும். எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை. கொள்கைக்காக அமைக்கப்பட்டது. தி.மு.க., கொள்கை கூட்டணி. தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்வதால் இ.பி.எஸ்., பொறாமையில் பேசுகிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்கள். அதுபோல் இ.பி.எஸ்., காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியை வளர்க்க முடியாதவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தி.மு.க., கூட்டணி உடையப்போகிறது என்கிறார் இ.பி.எஸ்; அவர் கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடர் ஆக மாறினார் என தெரியவில்லை. அவர் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்.

விரிசல் இல்லை

தி.மு.க., கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்.ஆனால் விரிசல் ஏற்படாது. தி.மு.க., கூட்டணி கொள்கை கூட்டணி. மக்கள் கூட்டணியாகவும் உள்ளது. மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை தொடர்ந்து தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர் தான் இ.பி.எஸ்.,. ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க இ.பி.எஸ்., வர மாட்டார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மட்டுமல்லாமல், அதற்கு பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தி.மு.க., கூட்டணி தான் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:47

கூச்ச நாச்சம் பார்க்காமல் எங்கும் சமரசம் ....... எதிலும் சமரசம் .... இதுதான் திமுகவின் வரலாறு .....


Bala
அக் 23, 2024 20:55

திராவிட மாதிரிக்கு ஏழரைச் சனியன் உச்சத்திலையாம்?


raja
அக் 23, 2024 20:05

இங்கே வரமாட்டனுவலே இந்த பாமரன் வைகுண்டன் வேனு போன்ற கொத்தடிமைகள் கருத்து எழுத ...


Bala
அக் 23, 2024 17:18

ஆம். ஏனென்றால் அவர் கருணாநிதி மகன் இல்லை. அதில் என்ன தவறு.


என்றும் இந்தியன்
அக் 23, 2024 16:57

அப்போ நீ முதல்வர்???மக்கள் விளாசல்


nb
அக் 23, 2024 16:53

EB monthly ரீடிங் எப்ப எடுப்பாங்க. வாக்குறுதி கொடுத்து 3 வருஷம் ஆச்சு


S.kausalya
அக் 23, 2024 15:48

கண்ணாடியை கழட்டுங்க . கொஞ்சம் வயசு ஆனா மாதிரி தெரியுது


nagendhiran
அக் 23, 2024 15:30

பிண"அரசியல்தாதியை விட தோதிடர் அரசியல் தப்பில்லை விடியலே?


Senthoora
அக் 23, 2024 14:53

ஜோதிடர் மட்டுமல்ல, ஏலாம் அறிவு படைத்தவர்,


Narayanan Sa
அக் 23, 2024 14:35

EPS போலவே ஸ்டாலினும் கிளி ஜோசியம் பார்க்க ஆரம்பித்து விட்டார் போல தெரிகிறது


முக்கிய வீடியோ