உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது'' என முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளனர். துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k446cex0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பயங்கரவாதிகள் மீது மட்டுமே பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். பாகிஸ்தான் என்ன செய்கிறது இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12 ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம். நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காக சண்டை போடவில்லை. நமது நாட்டு பங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது. இந்தப் போர் பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கிறது. இது இப்போது முடியாது. இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஒரு உயிரை கொல்வதற்கு பயப்பட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இல்லை. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடே கிடையாது. பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது. தமிழகத்தில் முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.Ramakrishnan
மே 10, 2025 22:17

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். பா.ஜ.தலைவர் பதவியில் இருந்து தூக்கிய பிறகும் இவர் வாய் மட்டும் ஏன் அசைகிறது? இதற்குப் பெயர் தான் மைக் மோபியா என்பார்களோ?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 10, 2025 13:40

உண்மை....... இந்தியா அறத்தின் படி தாக்குதல் நடத்துகிறது..... தாக்குதல் நடத்தியது 20% சதவிகிதம் தீவிரவாதிகள் முகாம்கள் மீது.....மிகுதி 80% சதவிகிதம் தற்காப்பு தாக்குதல்....இதுவும் ஒரு போர் தந்திரமே....எதிராளியை அடிக்க விட்டு மேற்கொண்டு தாக்க ஆயுதங்கள் இல்லை என்று சோர்ந்து போகும் போது திருப்பி அடித்தால் அந்த தாக்குதலால் பாதிப்பு படு பயங்கரமாக இருக்கும்.... அதை பாகிஸ்தான் உணரும்......இதுவும் ஒரு போர் யுக்தியே....மோடிஜி ஒரு கைதேர்ந்த ராஜ் தந்திரி.... அவர் மேற்பார்வையில் நடக்கும் இந்த யுத்தத்தால் பாகிஸ்தான் மீண்டு வர பலசகாப்தங்கள் வேண்டும்.....பாரத அன்னைக்கு வாழ்த்துக்கள்.... வெற்றி வாகை சூடி வர இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்.... ஜெய்ஹிந்த்.....!!!


Raja
மே 10, 2025 13:09

Well said Mr. Annamalai


Sangi Saniyan
மே 10, 2025 11:05

என்னது அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருக்கிறாரா? அவர் பாகிஸ்தான் எதிர்க்க போர் புரிய காஸ்மீர் எல்லையில் பொம்மை துப்பாக்கி இல்ல நிஜமான துப்பாக்கி வைத்து சண்டைக்கு ரெடியா இருப்பதாக கேள்வி பட்டேன்? நீங்க என்னடானா இப்படி சொல்லுறிங்க? எது தான் உண்மை?


அப்பாவி
மே 10, 2025 10:39

இது போருக்கான நேரமல்லன்னு உபதேசம் பண்ணியிருக்கக் கூடாது. அவிங்கவங்க அறம் அவிங்களோடது.


Bharathi
மே 10, 2025 10:36

This is time to eradicate completely and divide them in to 4 ...Baluch as separate country....POK and Punjab to be captured and implement president rule...remain as PAK and whoever not happy with India to be shifted their


பாமரன்
மே 10, 2025 10:36

அடடே... மகாப்ரபு வந்தாச்சா...??? நாலு நாளாக சத்தத்தை காணோம்னதும் பார்டருக்கு போயி டுப்புடுப்புன்னு சுட ஆரம்பிச்சிருப்பார்ன்னுல நினைச்சேன்... ஐயா வீடியோ சாமி... இங்கே நடக்கும் களேபரத்துக்காக பெரிய ஜி சின்ன ஜி குட்டி ஜி கூட சவுண்ட் இல்லாமல் இருக்காய்ங்க... கொஞ்சம் ம்ம் ம்க்கும் ம்ம்... ஓகேவா


Bharathi
மே 10, 2025 10:34

Great Annamalai Ji but the diplomatic move in current situation work in this era that too with PAK?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை