உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்துக்கு 50 சிறப்பு பஸ்கள்

ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்துக்கு 50 சிறப்பு பஸ்கள்

சென்னை:ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக., 3ல், சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.விரைவு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆடி அமாவாசை, ஆக.,4ல் வருவதால், முன்னோருக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்க, ராமேஸ்வரத்துக்கு அதிக மக்கள் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆக., 3ல், சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, ராமேஸ்வரத்துக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணியர் www.tnstc.in என்னும் இணையதளம் மற்றும் tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை