UPDATED : ஜன 11, 2024 01:43 PM | ADDED : ஜன 11, 2024 01:37 PM
சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம் என்றும், எனக்கு கால் வலி இருக்கிறது; வாய்ப்பிருந்தால் நான் கலந்து கொள்வேன் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.இது குறித்து இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கனமழையால் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டிச.,3,4ம் தேதி பெய்த மழை, வெள்ளத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம். வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்தும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நல்ல கூட்டணி அமைந்த பிறகு தொகுதிகள் பங்கீடு குறித்து பேசுவோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=crke94ki&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் யார் வேண்டுமென்றாலும்
பங்கேற்கலாம். எனக்கு கால் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் நான் கலந்து
கொள்வேன். லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அதிமுக வேட்பாளர் உரிய நேரத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இ.பி.எஸ்., வலியுறுத்தல்
முன்னதாக எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி,எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களின் கருத்தினை அறிந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி,எஸ்., தெரிவித்துள்ளார்.