மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
1 hour(s) ago
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்
5 hour(s) ago | 3
சென்னை:ஊதிய உயர்வு கோரி, ஆயுஷ் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், பொது சுகாதாரத் துறை ஆயுஷ் பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:ஆரம்ப சுகாதார நிலைங்களில், தினமும் 300 ரூபாய் கூலியில் பணியாற்றும் எங்களுக்கு வார விடுப்பு கிடையாது. வார விடுப்பு வழங்குவதுடன், மாதச் சம்பளமாக வழங்க வேண்டும். அத்துடன், இ.எஸ்.ஐ., -- பி.எப்., போன்றவற்றையும் பிடித்தம் செய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.பல ஆண்டுகளாக நீண்ட தொலைவில் பணியாற்றுவோரை, சொந்த மாவட்டத்தில், இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 hour(s) ago
5 hour(s) ago | 3