உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர்

மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுப்பினர்கள், கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார். இன்றைய சட்டசபை கூட்டத்தில், குளித்தலை, உத்தரமேரூர், பேராவூரணி, எம்எல்ஏ.,க்கள் அவரவர் தொகுதிகளில் தடுப்பணைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்; பல்வேறு உறுப்பினர்கள் பலர் இந்த கோரிக்கையை முக்கியமாக வைக்கின்றனர். தடுப்பணைகள் கட்டுவது குறித்து எவை சாதகமாக உள்ளது என்பது குறித்து முதல்வருடன் பேசி வருகிறேன். தமிழகம் முழுவதும் இன்னும் 2 ஆண்டுகளில் தேவையான தடுப்பணைகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.ராமநாதபுரம் அருகே வைகை ஆற்றில் கருவேலம் மரங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்து தனியாக ஒரு மனு கொடுத்தால் முடிந்த அளவுக்கு செய்து தருகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்

தினமலரில் நேரடி ஒளிபரப்பு

சட்டசபை நிகழ்வு தினமலர் இணைய டிவியி,ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். www.youtube.com/watch?v=ugebiBXLo00


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

RAMESH
ஜூன் 24, 2024 16:57

இது உங்கள் 2022 வாக்குறுதி ஆச்சே....இப்போது தான் நினைவு வந்துள்ளது


TCT
ஜூன் 24, 2024 15:05

- No body can catch them


venugopal s
ஜூன் 24, 2024 14:44

தமிழகத்தில் நல்ல விஷயம் எது நடந்தாலும் சிலருக்கு பொறாமையில் வயிறு எரியவதைப் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.


G.Kirubakaran
ஜூன் 24, 2024 13:16

40 வருடங்களாக, துறை முருகன் சம்பாதித்தது, பத்தவில்லை. அவர் நினைத்து இருந்தால், அணைத்து ஆறு, ஏறி, குளங்களை தூர் வாரி, அணைத்து மழை நீரை சேமித்து இருக்கலாம். செய்யவில்லை மஹான். சுய சம்பாதித்து, அதற்காக கருணாநிதி குடும்பத்தில் ஒத்து ஓதியே காலத்தை கடத்தி விட்டார்


N Ramesh
ஜூன் 24, 2024 13:08

அடுத்து கொள்ளைக்கு பிள்ளையார் சுழி....


Ramaswamy Jayaraman
ஜூன் 24, 2024 12:38

தண்ணிரே இல்லாத ஆறுகளில் தடுப்பணை எதற்க்காக. புரியவில்லை.. தண்ணிர் இருந்த ஏரியில் தூர் வருவதாக கூறி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, தூறும் வரவில்லை, தண்ணீர் வருவதற்கும் வழியில்லை. இதுதான் மதுராந்தகம் ஏரியின் நிலை. இந்த நிலையில் வெவேறு இடங்களில் தடுப்பணை. மக்கள் வரி பணம் .....


G.Kirubakaran
ஜூன் 24, 2024 13:11

பணம் பண்ணவே


Anand
ஜூன் 24, 2024 12:28

சில வருடங்கள் கழித்து "தடுப்பணைகளை மிகச்சிறப்பாக கட்டி முடித்தோம், ஆனால் அவைகளை காக்கா தூக்கி சென்று விட்டது".


rama chandran
ஜூன் 24, 2024 11:51

கருவேலம் மரத்தை அகற்ற தனியா மனுக்கொடுத்தால் அகற்றுவீர்களா? கோரிக்கை மூலம் அகற்றமாடீர்கள். நல்ல பொறுப்புள்ள அமைச்சர் உன் பேச்சில் ஆணவம் தெரிகிறது .


தமிழ்வேள்
ஜூன் 24, 2024 11:43

தற்போது தரை கீழ் தடுப்பணை என்றொரு விஷயத்தை முன்னெடுத்துள்ளார்கள்.. தரைக்கு மேல் கட்டினாலே ஒழுங்காக இருக்காது ..தரை கீழ் அணை என்றால் புகுந்துவிளையாடலாம் ....நல்ல திருட்டு மாடல் ....


Indhuindian
ஜூன் 24, 2024 11:35

முதல்லே அந்த இடத்துலெலாம் தண்ணி வருதான்னு பாருங்க அப்புறம் கட்டுங்க இல்லேன்னா ரயில் வராத தண்டவாளத்துலே தலையை வெச்சி ஆர்பாட்டம் பண்ண மாதிரி ஆயிடப்போவுது


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி