உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமருக்கு கொலை மிரட்டல்; திமுக நிர்வாகியை கைது செய்ய பாஜ வலியுறுத்தல்

பிரதமருக்கு கொலை மிரட்டல்; திமுக நிர்வாகியை கைது செய்ய பாஜ வலியுறுத்தல்

சென்னை: பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை; தென்காசியில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் கொலை மிரட்டல் விடுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.நாட்டின் அதிமுக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவரை, அதிலும், உலகமே போற்றும் மாபெரும் தலைவரைக் குறித்து எந்தவொரு மரியாதையுமின்றி, மேடை நாகரிகமுமின்றி கொலை மிரட்டல் விடுத்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது. அதிலும், உடனிருந்த தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமாரும், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவும் மாவட்டச் செயலாளரின் கொடூரப் பேச்சைத் தடுக்காமல் மௌனம் காத்திருப்பது ஒட்டுமொத்த திமுகவினரின் வன்முறை போக்கையும் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது. இதைத் தட்டிக் கழிக்க எத்தகைய சாக்குபோக்கை திமுக கூறினாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.நமது பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு வரும் வேளையில், அவரது பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ள திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை