உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பரங்குன்றம் மலையின் உண்மை தன்மை தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி

 திருப்பரங்குன்றம் மலையின் உண்மை தன்மை தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையின் உண்மையை தன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்டு திருநகர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 பேரை அவர் சந்தித்து பேசிய பின் கூறியதாவது: அமைதியாக இருந்த உள்ளூரில் உள்ள ஹிந்துக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தனக்கூடு நிகழ்விற்கு உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்களை யாரையும் அனுமதிக்க கூடாது. ஸ்டாலின் அரசு ஹிந்து விரோத நடவடிக்கையால் நம்மை ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்று பேச வைத்திருக்கிறார்கள். தர்கா இருக்கும் 33 சென்ட்க்கு வெளியில் இருக்கும் முருகன் கோயில் தளத்தில் இருப்பதுதான் கல்லத்தி மரம். அங்கு அவர்கள் கொடி எப்படி இருக்கலாம். அந்த கொடி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். கல்லத்தி மரம் முருகப்பெருமானின் தலவிருட்சம். அது ஆக்கிரமிப்பு 33 சென்ட் வெளியில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பது பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு. முஸ்லிம்கள் மலையில் சென்று சந்தனக்கூடு நடத்தலாம் என்றால் 21 நாட்களாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஹிந்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. நாளை முதல் ஹிந்துக்கள் காசி விஸ்வநாதர் கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது. அப்படி இல்லை என்றால் காசி விஸ்வநாதர் கோயில் செல்வதற்கான வேலைகளை பா.ஜ., செய்யும். சிக்கந்தர் பாதுஷாவிற்கு கோரிப்பாளையம் பகுதியில் கல்லறை உள்ளது என்று சுற்றுலாத் துறை கையேடு சொல்கிறது. ஒருவருக்கு இரண்டு இடத்தில் கல்லறை எப்படி இருக்க முடியும். திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதில் உருவங்களை பார்த்தாலே ஹிந்து உருவம் தெரியும். அந்த அமைப்பின் உண்மையை தன்மையை பற்றி தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்றார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன்ஜி கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்துாணில் தீபம் ஏற்ற கோரிக்கை வைத்த பொதுமக்களை கைது செய்து அடைத்து வைத்துள்ளார்கள். பெரும்பான்மையான ஹிந்துக்கள் வாழும் நாட்டில் தற்போது மைனாரிட்டியாகிவிட்டோம். ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. போலீசாரின் அட்டூழியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறந்த பூர்ண சந்திரனுக்கு தீபம் ஏற்றியவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். மலைக்கு முஸ்லிம்களை அனுப்புகின்றனர். ஆனால் எங்களை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அனுப்ப மறுக்கின்றனர். ஸ்டாலினின் ஹிந்து விரோத ஆட்சிக்கு இவைகள் எடுத்துக்காட்டு. பூரண சந்திரன் இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. அன்று அவர் மதுரையில் தான் இருந்தார். நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை. பூர்ண சந்திரனின் ஆடியோ இருக்கும்போதே அந்த குடும்பத்தை அசிங்கமாக சித்தரிக்கிறது தி.மு.க., ஐ.டி.விங். 2026ல் தி.மு.க., என்ற தீய சக்தியை அகற்றுவோம். மலை அடிவாரத்தில் குடியிருப்பவர்களையே அங்கு குடியிருக்க விட மாட்டார்கள் போல் உள்ளது. நாங்கள் மத ஒற்றுமையை விரும் பினாலும் திராவிட மாடல் ஆட்சி விடமாட்டேன் என்கிறது. ஹிந்துக்கள் மலைக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் முஸ்லிம்கள் செல்ல அனுமதிக்கின்றனர். மதுரை 10 தொகுதியிலும் தி.மு.க., தோற்பது உறுதியாகிவிட்டது. தீப துாணில் தீபம் ஏற்ற முஸ்லிம் தலைவர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்தால் தோல்வி ஏற்படும் என்ற காரணத்தினால் முதல்வர் ஸ்டாலின் பிரித்தாளும் கொள்கையை கையாள்கிறார் என்றார். மாலை 6:30 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் கைதானவர்களை எந்த நிபந்தனையும் இன்றி போலீசார் விடுவிப்பார்கள் என எச்.ராஜா கூறி சென்றார். மாலை 6:35 மணி ஆகியும் கைதானவர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபத்தின் முன்பு கூடியிருந்த பா.ஜ., அகில பாரத அனுமன் சேனா, பொதுமக்கள், ஹிந்து அமைப்பினர் திருநகர் 1வது பஸ் ஸ்டாப்பில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசினர். ஆனால் அவர்கள் கலந்து செல்லவில்லை. இரவு 7:10 மணிவரை அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

'தி.மு.க.,வுக்கு எதிராக சுடர்விடும் தீபம்'

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசை கண்டித்து தீக்குளித்து உயிர்நீத்த பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்ற எச்.ராஜா அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற ஹிந்து விரோத அரசு அனுமதிக்க மறுத்ததால் இதுபோன்ற துயர செயலில் பூர்ணசந்திரன் ஈடுபட்டார். உரிமையை போராடி பெற வேண்டுமே தவிர உயிரை விடுவது தீர்வாகாது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான முதல் வழக்கு 1920ல் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் நில அளவீடு செய்து தீர்ப்பளித்தது. அதில் முஸ்லிம்கள் உரிமை கோரும் 33 சென்ட் இடம் அவர்களுக்கு சொந்தம். மீதமுள்ள மலை முழுதும் முருகன் கோயிலுக்கு சொந்தம் என குறிப்பிட்டுள்ளது. இதில் என்ன விதி மீறல் உள்ளது. தீபம் ஏற்றியிருந்தால் அன்றே பிரச்னை முடிந்திருக்கும். இப்போது இப்பிரச்னை தீயாக தமிழகத்தில் சுழன்று வருகிறது. தி.மு.க.,வின் தவறான கொள்கையால் இனி தமிழகத்தில் தி.மு.க., அரசு அமையக்கூடாது என்ற மனநிலைக்கு ஹிந்துக்கள் வந்துள்ளனர். சிறுபான்மையினருக்காக நடக்கும் இந்த அரசு, சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையினரால் துாக்கியடிக்கப்படும். கார்த்திகை தீபம், தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிராக சுடற்விட்டு எரியும். பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை பா.ஜ., ஹிந்து அமைப்புகள் செய்து கொடுக்கும். பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், இதையும் அறிவிக்க வேண்டும். பா.ஜ., சிறுபான்மையின பிரிவு மாவட்ட செயலாளர் ரஜப்நிஷா வீட்டில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த 3 பேர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Subramanian
டிச 23, 2025 17:15

ஆம் கந்தர் சமாதியை மீட்க வேணாடும்


SRP Jaya Kumaar
டிச 23, 2025 13:27

காமராஜர் ஆட்சிக்கு தமிழகத்தில் நடைபெற்ற அணைத்து ஆட்சிகளுமே ஊழல் ஆட்சிகள்தான். முதல்வராக பதவியில் இருக்கும்போதே குற்றம் நிரூபிக்கப்பட்டு எ1குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் தான் ஜெயலலிதா. இந்து தர்மம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி பிரித்து ஓட்டு வாங்கி ஜெயித்து, அம்பானி மற்றும் அதானி போன்ற இந்துக்களை மட்டுமே வாழ வைக்கும் பாஜகவுக்கு திமுக அதிமுக எவ்வளவோ மேல். என்ன ஒன்று ஜெயலலிதாவோடு, அதிமுகவும் மறைந்துவிட்டது.


Chinnalagu Tholkapiyan
டிச 23, 2025 06:00

பெரும்பாமை ஹிந்து என்று சொல்லிக்கொண்டே பலனை அனுபவிக்கும் கூட்டம் மக்களை மதத்தின் பெயரால் பிரித்து அதிகார பலனை அனுபவிக்க துடிக்குறது


Kannan V
டிச 22, 2025 14:16

பாரதம் முன்னேறக்கூடாதென திருட்டு திராவிடம் துடிக்கிறது.


Rajesh
டிச 22, 2025 12:16

அய்யா உங்க பிஜேபி க்கு ஜெயிப்பதற்கு வழி தெரியல அதுக்கு நீங்க கையில எடுக்கும் ஆயுதம் மதம்


SULLAN
டிச 22, 2025 14:23

என்ன பிரதர் பொசுக்குன்னு உண்மையை இப்படி போட்டு உடைச்சிடீங்க ???


Subramanian
டிச 23, 2025 17:19

உறையில் இருக்கும் வாளை எடுக்கவும் வேண்டுமா


Rathna
டிச 22, 2025 12:06

உள்ளூர் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதபோது தீபம் ஏற்றுவதில் மிக பெரிய சதி இருப்பதாகவே தெரிகிறது. ஒரு சமூகத்தை அடக்க செய்யும் செயல் என்பதை மக்கள் புரியதொடங்கி உள்ளனர்.


Rajesh
டிச 22, 2025 12:04

உண்மைதான்


Kannan
டிச 22, 2025 09:44

பிரச்சினை வரணும் அதில் குளிர் காயளம் ன்னு அலையுறார். DMK மறுபடி வரக்கூடாதுனு ஊளை இடுறார். தமிழ்நாடு முன்னேறி இருக்கு. அது இவங்களுக்கு பிடிக்கலை.


James Mani
டிச 22, 2025 08:40

ஹிந்து VS முஸ்லீம் VS கிறிஸ்டின் அப்புறம் பாரத Growth is கிரேட் Now


SRP Jaya Kumaar
டிச 22, 2025 07:43

இந்து அமைப்புகள்ங்கிற பேருல, அந்த மலை விவகாரத்துல நீங்க தலையிடற வரைக்கும் எந்த பிரச்சினையுமின்றி எல்லா மக்களும் போயிக்கிட்டு வந்துகிட்டு தான் இருந்தாங்க. பிரச்சினையே நீங்க வந்த பிறகுதான்.


பேசும் தமிழன்
டிச 22, 2025 08:10

விடியாத ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.. விடியல் வரும் என்று அவர்கள் சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்ட இந்து மக்கள் இன்னும் அனுபவிப்பார்கள். இனியாவது யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெளிவாக ஓட்டு போடுங்கள். இல்லையேல் உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. அவர்களுக்கு மார்க்க ஆட்களும் அவர்களது ஓட்டுக்கள் மட்டுமெ முக்கியம். உங்கள் ஓட்டு தேவையில்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள். திருந்த வேண்டியது அவர்கள் இல்லை... ஓட்டு போடும் நீங்கள் தான் !!!


N Sasikumar Yadhav
டிச 22, 2025 08:39

இந்துமத துரோக இந்துமத விரோத திருட்டு திமுகவின் 200 ரூபாய் ஊ??..?பிஸாக இருக்கும்போது உனக்கு இந்துமத வழிபாட்டு உரிமை தெரியாது . மதச்சார்பின்மை பற்றி வாய்கிழிய பேசுகிற மானங்கெட்ட திராவிட மாடல் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபமேற்ற விடவில்லை எல்லாம் சிறுபான்மையிரினரின் ஓட்டுக்காக செய்கிறார் திமுக தலிவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை