மேலும் செய்திகள்
குமாரபாளையம் கல்லூரியில் 128 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
8 hour(s) ago | 2
தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்து, விவசாயிகளை அழிக்க பார்க்கிறது. இந்தச் சட்டம், விவசாய நிலங்களை மட்டுமின்றி, ஆறுகள், ஏரிகளை தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவும் வழிவகை செய்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு விளை நிலங்களை கொடுக்க மறுக்கும் விவசாயிகளை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கின்றனர். பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழக அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றன.நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, வரும், 29ம் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. மாநில அளவிலான போராட்டமாக, இது இருக்கும்.- பி.ஆர்.பாண்டியன்,தமிழக ஒருங்கிணைப்பாளர்,அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம்.
8 hour(s) ago | 2