உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கு மற்றுமொரு சான்றாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். போர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்ஜின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழகத்தின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.அடுத்த தலைமுறை இஞ்ஜின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள போர்டின் முடிவானது, தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது. தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

theruvasagan
அக் 31, 2025 22:03

ஆட்சி மாறப்போகுது. இனிமே நமக்கு குடைச்சல் இடைஞ்சல் எதுவும் இருக்காது என்ற எதிர்பார்ப்பு அந்த நிறுவனத்துக்கு வந்திருக்கும். அதுதான் மீண்டும் திறக்க நம்பிக்கை வந்திருக்கும் போல.


rama adhavan
அக் 31, 2025 19:31

எப்போ வரும்? அடுத்த தலைமுறையிலா? ஆமாம் ஏற்கனவே இயங்கிவந்த போர்ட் ஏன் மூடப்பட்டது? எப்போது? இவை எல்லாம் அறிக்கையில் பதிலற்ற வினாக்கள்?


சிட்டுக்குருவி
அக் 31, 2025 19:05

ஐயா நீங்கள் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மையை வெகுவாக குறைத்து விட்டீர்கள் .அவர்களுக்கு வேலைகொடுத்து அல்ல .அவர்களை வேலைக்கு தகுதி இல்லாமல் ஆக்கி ,எப்போதும் குடிபோதையில் ,கஞ்சா போதையில் வைத்து , மாநிலத்தில் உள்ள வேலைகளுக்கெல்லாம் பீஹாரிலிருந்து வேலையாட்களை வரவழைத்து மாநிலத்தை யாரும் ஊழல் இல்லா ஆட்சி என்று குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சிபுரிகின்றீர்கள் .இன்னும் நிறுவனங்களை கொண்டு வந்தால் பிஹார் மாநிலம்முழுவதும் வேலை செய்யும் இளைஞர்கள் இல்லாத மாநிலமாகி விடும் .அதனால் பீகாரை சிறிது விட்டுவையுங்கள் .உங்களுடைய போதை ஆட்சி மக்கள் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .


tamilvanan
அக் 31, 2025 19:02

முதலில் ஏன் இந்த கம்பெனி தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது என்பதை ஆராய வேண்டும். திமுக கம்யூனிஸ்ட்களால் தொழில் யூனியன்கள் தூண்டி விடப்பட்டு ஸ்ட்ரைக் செய்ததால் தானே. இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதா? மறுபடியும் வராதா? அதற்கு என்ன நடவடிக்கை மாடல் அரசு எடுக்கப்போகிறது?


ராமகிருஷ்ணன்
அக் 31, 2025 18:54

போர்டு நிறுவனம் எல்லா செலவும் செய்து 100 கார் உற்பத்தி செய்தபின் 51 காரை மாப்பிள்ளையிடம் கொடுத்து விடனும், அவர் விற்று பணம் எடுத்து கொள்வார் இதுதான் ஒப்பந்தம் O K வா


திகழ்ஓவியன்
அக் 31, 2025 18:47

அய்யா வெளியே வரும்வரை சொல்லதீர்கள். இதையும் குஜராத்துக்கு தள்ளி கொண்டு போக ஒரு கூட்டம் அலையும்.


தனவேல்
அக் 31, 2025 18:03

வழக்கம் போல் அடிமைகள், தற்குறிகளுக்கு வயிற்றேரிசல்


Sun
அக் 31, 2025 17:56

இந்த செய்தி போர்டு நிறுவனத்திற்கு தெரியுமா?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 19:50

அவர்களின் நிறுவன இணையதளத்தில் இருந்து: ஃபோர்டு மோட்டார் கம்பெனி Ford Motor Company நிறுவனம் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அதன் உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU சமீபத்தில் கையெழுத்தானது. ஃபோர்டு நிறுவனம் அதன் சென்னை ஆலையில் அனைத்து புதிய, அடுத்த தலைமுறை என்ஜின்களை All-new, next-generation engines உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. • இந்த உற்பத்தி, வாகனங்களை உருவாக்குவதற்காக அல்லாமல், முக்கியமாக ஏற்றுமதி சந்தைகளுக்காகவே Export Markets இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. • இந்தத் திட்டத்திற்காக ₹3,250 கோடி $370 மில்லியன் ஆரம்ப முதலீடு செய்யப்படவுள்ளது. • ஆலையில் ஆண்டுக்கு 2,35,000 என்ஜின்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. • உற்பத்தி 2029 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கு முன்னதாக ஆலையை மாற்றியமைக்கும் retooling பணிகள் நடைபெறும். • இந்த திட்டத்தின் மூலம் 600-க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Vasan
அக் 31, 2025 21:54

If Ford CEO is asked about this, he may ask back " Is it?", in Rajni style.


duruvasar
அக் 31, 2025 17:53

அமைச்சர் டி .ஆர். பி. ராஜா சொன்னால்தான் நாங்கள் நம்புவோம் அவர்தான் வெள்ளை பேப்பர் அறிக்கை தருபவர். கிளீன் இமேஜ் உள்ளவர்.


V Venkatachalam, Chennai-87
அக் 31, 2025 17:28

ஃபாக்ஸ் கான் சமாச்சாரத்தை மூடி விட மக்களுக்கு அல்வா பாக்கெட் அனுப்பி வைக்கப்படும். சாப்பிட்டு விட்டு மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருக்க வேண்டும். தேர்தல் வரை இந்த ஃபோர்ட் சமாச்சாரத்தை வைத்து ஓட்டுவோம்.இன்னும் ஒரு 5 மாசமிருக்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை