உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூணுால் அறுத்தோர் மீது நடவடிக்கை கவர்னரிடம் பிராமணர் சங்கம் மனு

பூணுால் அறுத்தோர் மீது நடவடிக்கை கவர்னரிடம் பிராமணர் சங்கம் மனு

சென்னை:கவர்னர் ரவியை சந்தித்து, 'பிராமணர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசுதல், பூணுால் அறுப்பு போன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பிராமணர் சங்கத்தினர் மனு அளித்தனர்.தமிழக பிராமணர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில், சங்க மாநில பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர் ஸ்ரீமதிலலிதா உள்ளிட்டோர், கவர்னர் ரவியை நேற்று ராஜ் பவனில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:நெல்லை தியாகராஜ நகரில், அகிலேஷ் என்பவரின் பூணுாலை, அடையாளம் தெரியாத நபர்கள் அறுத்துள்ளனர். கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பிராமண சமூகத்தை பல்வேறு காலகட்டங்களில், தொடர்ந்து அவமரியாதையாகவும், இழிவுபடுத்தியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், பிராமண சமூகத்தை அழிக்கவும், அதன் வாயிலாக ஹிந்து மதத்தை முழுதும் ஒடுக்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.பிராமண துவேஷ பேச்சு தொடர்பாக, பல முறை புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது போன்ற செயல்கள் இனி நடக்காத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கவர்னர் ரவி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக சங்க நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Santhanam
அக் 23, 2024 10:29

சிவ சேகர் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் மற்றும் பேசுவார்


God yes Godyes
அக் 06, 2024 10:12

பூநூல் நல்லொழுக்கத்தின் அடையாளம் இது வரை கோர்ட் சாட்சி கூண்டில் ஏறி எந்த வழக்காயினும் சாட்சி சொன்னவரில் பிராம்மணன் எவருமில்லை.


God yes Godyes
அக் 06, 2024 10:05

பப்ளிக்கில் எவனாவது எவனையாவது திட்டினா அதை ஒரு இருபது பேர் கூடி நின்று வேடிக்கை பார்ப்பானுங்க.அதைத் தான் சாமி கிண்டல் கட்சி செய்யறானுவ


MATHURAM
செப் 27, 2024 23:18

மகா பாவிகளா .அப்படி என்ன உங்களுக்கு செய்தோம் ...எல்லாம் நல்லா தான இருக்கீங்க....இன்னும் என்ன வேணும்....


M.R. Sampath
செப் 27, 2024 17:03

தி மு க வின் ஆட்சி காலம் ஆட்டம் கண்டு விட்டது என்பதற்கு அறிகுறிகள் தொடங்கி விட்டன. பிராமண சமுதாயத்தை அல்லாமல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தையும் அலட்சியப்படுத்தி கேவலப்படுத்தி வருகின்றனர். பெரியார் /அம்பேத்கார்/அண்ணா என்று கூறிக் கொண்டு சமூகநீதியை முற்றிலும் புறக்கணிக்கும் கட்சி ஆளும் திமுக கட்சி. தவிர, வாரிசு அரசியல் காரணமாக , மற்றும் கூட்டணி கட்சிகள் அனைவருக்கும் முன்னுரிமை /ஆட்சியில் பங்கு தராமை போன்ற காரணங்களால் உட் கட்சி பூசல் கண்டிப்பாக வெடிக்கும். வி சி க, சி பி எம் தங்களுடைய ஏமாற்றத்தை/எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதுவல்லாமல் தி முக வினர் பூணல் அறுப்பு, கடவுள் அவமதிப்பு, தலித் மக்கள் உதாசீனம் என்று ஓவ்வொரு நாளும் ஈடுபட்டு தங்கள் கட்சிக்கே கேடு விளைவித்து வருகி்ன்றனர். மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 2026 இல் தக்க பதிலடி கொடுப்பார்கள்.


RAMESH
செப் 26, 2024 12:54

தீய தீமுகாவை வெளிப்படையாகவே ஆதரிக்கும் எஸ் வீ சேகர் கோமாவில் இருக்கிறாரா


VIJAYALAKSHMI SOUNDARARAJ
செப் 26, 2024 12:08

பிற மதத்தினரின்/ஜாதியினரிடம் இது போல் நடக்குமா?


Rajarajan
செப் 26, 2024 11:00

ஒவ்வொரு செயலுக்கும், ஒரு எதிர் செயல் உண்டு. தனியார் நிறுவனங்கள் இதையெல்லாம் பாத்துகிட்டே தான் இருக்கு. இந்த வயசுல, கட்சிக்காரங்க பேச்சை கேட்டு செய்யற செயல் எல்லாம், உங்களுக்கு குடும்பம் அமைந்து, பிள்ளைகுட்டி வந்த அப்பறம், தனியார் நிறுவனங்கள் வேலையே தராது. அப்போ தெரியும், அடுத்தவன் பேச்சை கேட்டு, அநாகரீகமா நடந்ததன் விளைவு. ஆனா, உங்களை இப்படி தூண்டிவிட்டவன் எல்லாம் வெளிநாட்டுல பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து செட்டில் ஆகிட்டாங்க.


sankaranarayanan
செப் 26, 2024 08:49

இது போன்று ஒரு தாழ்த்தப்பட்ட சமூகக்கத்தினருக்கு ஏற்பட்டால் உடனே ஐயோ ஐயோ என்று எல்லா கட்சிகளும் புலம்பி அரசியல்வியாதிகளும் புலம்புவார்கள் ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்களையும் அந்த செய்தியை அழிக்கப்பார்கிறார்கள் செய்தி வெளிவரக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்னடா இந்த ஜனநாயகம் மனிதர்களுக்குள் வேறுபாடு காணும் அரசாகவே உள்ளது குற்றம் புரிந்தவனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் அரசே கண்காணிக்க வேண்டும்


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 08:22

திருட்டு திராவிட கும்பல். இப்படித்தான் இருக்கும். எந்த நடவடிக்கையும் திராவிட மாடல் அரசு எடுக்காது. இவர்களை ஆதரிக்கும் பிராமணர்கள் எஸ்வி சேகர் ராமசுப்பிரமணியன் போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை