மேலும் செய்திகள்
தம்பியை கொல்ல முயன்ற அண்ணன் கைது
08-Jul-2025
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் தம்பியை வெட்டி கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உளுந்துார்பேட்டை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன்கள் கமலக்கண்ணன், 40; இளையராஜா, 33; விவசாயிகள். இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 2016 டிச., 19 ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், தம்பி இளையராஜாவை கத்தியால் தலை. கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினார். படுகாயமடைந்த இளையராஜா சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருநாவலுார் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து, கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நத்திய நீதிபதி ஆறுமுகம், தம்பியை கொல்ல முயன்ற வழக்கில் கமலக்கண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் இளமுருகன் ஆஜரானார்.
08-Jul-2025