உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு: ஓ.பி.எஸ்.,க்கு கண்டனம்

அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு: ஓ.பி.எஸ்.,க்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ அ.தி.மு.க., தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் '' எனக் கூறியுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக., தோல்வியடைந்தது.

பாவகாரியம்

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,‛‛ ஒற்றை குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப் போன கட்சியையும் அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் ஆயத்தமாகுவோம் '' எனக்கூறியிருந்தார்.

உரிமை இல்லை

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.,வின் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். 2019 லோக்சபா தேர்தலில் 18 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. தற்போது இ.பி.எஸ்., தலைமையில் 20.46 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.தமிழகத்தின் உரிமைகளை காக்க தேசிய கட்சிகள் முன்வருவதில்லை. 2026ல் தி.மு.க.,வை தோற்கடித்து அதிமுக., ஆட்சி அமைப்போம். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். ஜெ.,யை கடுமையாக அண்ணாமலை விமர்சித்ததை ஓபிஎஸ் கண்டிக்கவில்லை.அதிமுக தொண்டர்களை அழைக்க ஓபிஎஸ்.,க்கு உரிமை இல்லை. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை ஓபிஎஸ் கண்டிக்கவில்லை. பா.ஜ., உடன் இணைந்து அதிமுக., வேட்பாளரை எதிர்த்தார். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Prabahara Lingan
ஜூன் 07, 2024 16:49

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு


Prabahara Lingan
ஜூன் 07, 2024 16:46

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.நம்மில் ஒற்றுமை நீங்கின் நம் அனைவர்க்கும் தாழ்வு.ஒபிஎஸ் அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.


GANESUN
ஜூன் 07, 2024 09:39

2026 தேர்தலுக்கு முன் அதிமுக தொண்டர்களுக்கு இருப்பது 2 ஆப்ஷன். 1. திராவிடிய எண்ணமும், வாரிசு அடிமை, லஞ்ச லாவண்யத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் திமூகவுக்கும். 2. சனாதன சிந்தை, நேர்மை, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எண்ணம் கொண்டவர்கள் பிஜேபிக்கும் மாறுவது நல்லது. இது மத்த உதிரி கட்சிகளுக்கும் பொருந்தும்...


Sivakuamar Panneerselvam
ஜூன் 06, 2024 22:36

எதிர்கட்சியிடம் காசு வாங்கிக் கொண்டு இப்படியெல்லாம் பேசி சேர விடாமல் தடுக்கிறார்களோ? அம்மாவின் போராட்டமெல்லாம் இந்த கயவர்களின் கொட்டத்தால் வீணாகி போகுது


Jai
ஜூன் 06, 2024 21:00

அதிமுக இந்த மாதிரி பல பேருடைய பேச்சையும் வசைபாடுதலையும் கேட்க வேண்டியுள்ளது. மன்சூர் அலிகானுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அளவுக்கு இறங்கி போனதிற்கு, அதே அளவு இறங்கி பாஜகாவுடன் கூட்டணி வைத்திருந்துக்கலாம். இன்று 20 இடங்களுக்கு மேல் பெற்று இந்திய அளவில் முக்கிய கட்சியாக அதிமுக இருந்திருக்கும். critical thinking இல்லாமல் உள்ளனர், அதிமுக தலைமையும் அடுத்தகட்ட தலைவர்களும்.


Dharmavaan
ஜூன் 06, 2024 20:13

அதிமுகவுக்கு சகுனி இரண்டு பேர்.கே பி முனுசாமி, சி வி ஷண்முகம்


மு. செந்தமிழன்
ஜூன் 07, 2024 07:29

அப்பறம் ...


Gopi
ஜூன் 07, 2024 22:18

அம்மாவின் விசுவாசி அம்மாவால் அடையாளம் காட்டியவர் திரு ஓ பி அவர்கள் அவர் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வார் மறுப்பவர் கட்சியை வளர்க்க மாட்டார் மறுப்பவர்களே நீங்கள் ஒன்றுசேர்ந்து கட்சியை காப்பற்றுங்கள் அம்மாவின் கடைசி தொண்டன்


sampath, k
ஜூன் 06, 2024 19:45

செல்ல காசு.


M.COM.N.K.K.
ஜூன் 06, 2024 17:17

சண்டை தொடரட்டும் தோல்வியும் தொடரட்டும் ராவணேஸ்வரனை திருத்த எத்தனையோ பேர் முயற்சித்தனர் திருத்த முடியவில்லை கடைசியில் என்ன நடந்தது அனைவரும் அறிந்ததே.அதேபோல் உங்களையும் யாரும் திருத்தமுடியாது கட்சியை அழிவிலிருந்து மீட்க யாராலும் முடியது போல் தெரிகிறது. உங்களுக்கும் நடக்கும்போல் தெரிகிறது.


Senthikumar k
ஜூன் 06, 2024 17:15

அம்மாவால் கட்சியை விட்டு துரத்தி விடப்பட்ட கேபி முனுசாமி யையும் ஜெயக்குமாரையும் கட்சியை விட்டு நீக்கினால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அசுர வளர்ச்சிகள் வளர்ச்சி பெறும் இவர்கள் இருவரும் சகுனியை போன்றவர்கள் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைய விட மாட்டார்கள் அதிமுகவை அழித்து விடுவார்கள்


Vijayakumar Srinivasan
ஜூன் 07, 2024 03:09

உண்மை தான் சார். ஒற்றுமை இல்லையேல். கட்சி கரைந்துவிடும். உம்,.காங்கிரஸ்.


Narayanan
ஜூன் 06, 2024 17:14

இப்படியே பேசிப் பேசி கட்சியை காணாமல் செய்துவிட்டு எம்ஜிஆர்& ஜெயா சேர்த்துவைத்த சொத்துக்களை பங்குபோட்டுக்கொண்டு ஓடிவிடுங்கள். அசிங்கமா இருக்கு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை