உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகளுக்கு சென்று ஓட்டு போட அழைப்பு: கட்சியினருக்கு பா.ஜ., அறிவுரை

வீடுகளுக்கு சென்று ஓட்டு போட அழைப்பு: கட்சியினருக்கு பா.ஜ., அறிவுரை

சென்னை: வேட்பாளருடன் ஒரே சமயத்தில் கூட்டமாக செல்வதற்கு பதில், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, வாக்காளர்களை சந்திக்குமாறு கட்சியினரை பா.ஜ., அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடன், ஒரே சமயத்தில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டமாக செல்வதற்கு பதில், குறைந்த நபர்கள் பிரசாரத்திற்கு சென்றால் போதும்.மற்றவர்கள் அனைவரும், தங்கள் பூத் கமிட்டிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, 'தி.மு.க.,வை ஏன் நிராகரிக்க வேண்டும்; தே.ஜ., கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்' என்பதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.வீடுகளில் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு போட அழைப்பு விடுப்பதுடன், அந்த ஓட்டுகளை பா.ஜ.,வுக்கு போட தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஏப் 16, 2024 06:48

% சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாக வேண்டும் இல்லை என்றால் அது உண்மையான ஜனநாயகமல்ல ஓட்டுப் போடாதவர்களின் பட்டியலை வெளியிட்டு அவர்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யுமளவில் இருக்க வேண்டும் ஜனநாயகக்கடமை என்பது யார் நாட்டை ஆள்வது / கொள்ளையடிப்பது என்பதை தீர்மானிக்கும் ஆகவே பொறுப்புடன் நடந்து கொள்வது சிறப்பு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை