| ADDED : நவ 17, 2025 01:49 AM
திருப்பத்துார்: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, பெங்களூரு டவுன் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு காரில் செம்மரக்கட்டை கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில், மேலும், இரு கார்களில் செம்மரக்கட்டை கடத்தி செல்வது தெரியவந்தது. அந்த கார் டிரைவர்களின் மொபைல் போன் எண்ணை வைத்து, இருப்பிடத்தை பார்த்தபோது, ஒரு கார் திருப்பத்துார் மாவட்டம், சின்ன கந்திலி அருகே நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. நள்ளிரவில் அங்கு விரைந்த பெங்களூரு போலீசார், காரை ஓட்டி செல்ல முயன்றனர். இயக்க முடியாததால் மீட்பு வேன் மூலம் எடுத்து செல்ல திட்டமிட்டனர். தகவலறிந்து திருப்பத்துார் வனத்துறையினர் அங்கு சென்று பெங்களூரு போலீசாரிடம் விசாரித்ததில், 6 அடி நீளத்தில், 11 செம்மரக்கட்டை காரில் இருப்பது தெரிந்தது. கர்நாடக போலீசாரின் விபரங்களை கேட்டு, அந்த காரை விடுவித்தனர்.