உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2008 ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.2008 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு தமிழக வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சியின் போது கடந்த 2013ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை ரத்து செய்யக்கோரி ஜாபர் சேட்டின் மனைவி உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.இதன்படி ஐ. பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அமைச்சர் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ஐ. பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அமைச்சர் என்பதால், வழக்கு தொடர கவர்னர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும்போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ram
ஏப் 04, 2025 22:14

கேவலமான தீர்ப்பு


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 19:51

இனி வரும் நாட்களில் எல்லா கழக அமைச்சர்களின் வழக்கும் ரத்தாகும் என்றே தோன்றுகிறது,நீதியரசர்களின் நீதி வழுவாமை எல்லாம் 80 களில் ஓடிப் போய்விட்டது போலும்.


அப்பாவி
ஏப் 04, 2025 18:28

நமது நாட்டின் வெட்டி சட்ட திட்டங்களே சீரழிவிற்கு காரணம். ஒரு கேசை 19, 15 வருஷம் நீட்டி விட்டாலே எல்லோரும் நிரபராதி ஆயிடுவாங்க. அமைச்சர் குற்றம் சாட்டப் பட்டால் கெவுனர் உத்தரவு தரணுமாம். மற்றவன் குற்றம் சாட்டப்பட்டால் எவன் வேணும்னாலும் வந்து விசாரிக்கலாமாம்.


Sundaran
ஏப் 04, 2025 18:22

அப்படியே செந்தில் பாலாஜி பொன்முடி மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்து விடுங்கள். வேலை , நேரம் மிச்சமாகும்


Mecca Shivan
ஏப் 04, 2025 18:01

RSB சொன்னது உண்மைதான்


Sriram
ஏப் 04, 2025 23:16

நீதி அரசர் கவனிக்கப்பட்டிருப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை