வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது முந்தைய திருட்டு திராவிட கோவால் புர கொள்ளை கூட்ட தலைவன் கட்டுமர ஆட்சியில் நடந்தது...
சென்னை:சி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட, பேரணியாக செல்ல முயன்ற, 100 வழக்கறிஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.கடந்த 2009ம் ஆண்டு, பிப்., 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில், போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதில், போலீசார் நடத்திய தடியடியில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என, பலரும் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தடியடி சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, வழக்கறிஞர்கள் ஆண்டு தோறும் பிப்., 19ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட 16ம் ஆண்டையொட்டி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சி.பி.ஐ., அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான வழக்கறிஞர்கள், ஐகோர்ட் ஆவின் கேட் முன்பு திரண்டு, சி.பி.ஐ.,க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின், அங்கிருந்து பேரணியாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு புறப்பட்டனர். அவர்களைப் போலீசார் மறித்து கைது செய்தனர். மொத்தம் 10 பெண்கள் உட்பட, 100 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது முந்தைய திருட்டு திராவிட கோவால் புர கொள்ளை கூட்ட தலைவன் கட்டுமர ஆட்சியில் நடந்தது...