உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருமாமளவன்

மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருமாமளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்: பெரம்பலுாரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளளன் அளித்த பேட்டி:தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார். தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு இந்த பிரச்னையை முடித்து வைக்க வேண்டும் என்ற ஆர்வம் காட்டவில்லை. ஏதோ இது, தமிழக பிரச்னை மட்டும் என, கண்டும் காணாமல் இருந்து வருகிறது. மத்திய அரசு நினைத்தால் தமிழக மீனவர்களின் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமை உள்ள அரசாகவும், இலங்கை அரசுடன் இணக்கமான ஒரு அரசாகவும் இருக்கிறது. ஆனால், தமிழக மக்கள் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்னைகளில் மத்திய அரசு ஓரவஞ்சனையோடு அணுகுவதே இந்த பிரச்னை தொடர காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
மார் 17, 2025 05:26

ராஜாபக்சேவிடம் பல்லை இளித்து கொண்டிருந்தது எதற்க்காக , அவனின் வேங்கைவயல் போன்ற பரிசுத்த நீரை குடிப்பதற்காகவா ?


Mani . V
மார் 17, 2025 04:39

சரிங்க, கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமை.


Kasimani Baskaran
மார் 17, 2025 04:17

தீம்க்கா ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பவும் மீனவர் பிரச்சினை என்பது புதிதல்ல. இரட்டை மடிப்பு வலை மற்றும் மீனவர் போர்வையில் கடத்தல் போன்றவை குறைந்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்சினையே.


xyzabc
மார் 17, 2025 03:51

இவன் வஞ்சிக்கப்பட வேண்டியவன்


Appa V
மார் 17, 2025 01:55

ராஜபக்சவிடம் பரிசு வாங்க இலங்கை செல்லும் திருமா மீனவர்கள் விடுதலைக்கு மோடி தலையீடு எதிர்பார்ப்பது நியாயமா